Saturday 7 April 2012

3000 ஆண்டுகளானாலும் பிரபாகரன் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! - விக்ரமபாகு




Prabhakaran
இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளானாலும் பிரபாகரன் நா மம் வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிட முடியாது, என இலங்கையின் நவசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றுக் கொண்� �ிருந்தார் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.

பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளிவாய் க்கால் வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது. வரலாற்றில் அவருக்கு நிகரான ஒருவரைப் பார்ப்பது கடினம்.

பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராட� ��னார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு எந்த அபாயமுனையிலும் நின்று பாடுபட்டார்.

அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது.

அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட.

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் � ��ீது பிரபாகரன் மிக அதிக பற்றைக் கொண்டிருந்தார்.

மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப் பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும்.

பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் � �டிவயிற்றில் அடிக்கும் மகிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஏனைய விடயங்களைப் பற்றிச் சிந்திக்கலாம் பார்க்கலாம்.

இவ்வாறு விக்கிரமபாகு கருணாரத்ன அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். ராஜபக்சேவை எதிர்த்து இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறி ப்பிடத்தக்கது.


http://tamil70.blogspot.com

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger