சென்னைக்கு வந்த டெல்லி ரெயிலில் வாலிபரின் தலையில்லா உடல் இருந்ததுபோல் டெல்லியிலும் பெண்ணின் தலையில்லா உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இருவருக்கும் ஒற்றுமை உள்ளது இருவரும் காதலர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த டெல்லி செல்லவுள்ளனர். டெல்லியில் இருந்து சென்னை வந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரும்பு பெட்டிக்குள் தலையில்லாத வாலிபரின் உடல் இருந்தது. இந்த உடலை கைப்பற்றி சென்ட்ரல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல டெல்லியில் சப்கான் பிகாபார்க் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது. சென்னை மற்றும் டெல்லியில் அடுத்தடுத்து 2 உடல்கள் தலையில்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது 2 மாநில போலீசாரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கொலையுண்ட 2 பேரும் காதல் ஜோடியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2 பேரின் உடல்களையும் அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதுதொடர்பாக உடனடி யாக டெல்லி போலீசாரை தொடர்பு கொண்டு பேசிய சென்ட்ரல் ரெயில்வே போலீசார் விரைவில் அங்கு சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கொலையுண்ட வாலிபர் உடலுடன் சென்னை வந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரபிரதேசம், மகாராஸ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களை கடந்து 27 ரெயில் நிலையங்கள் வழியாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்துள்ளது.ஆந்திரா, விஜயவாடா, சூலூர் போன்ற 7 முக்கிய ரெயில் நிலையங்களில் 15 நிமிடம் வரை இந்த ரெயில் நிற்பது வழக்கம். இந்த நேரத்தில்தான் கொலையாளிகள் வாலிபரின் உடல் அடங்கிய பெட்டியை ரெயிலில் ஏற்றி இருக்கவேண்டும். கொலை செய்யப்பட்ட வாலிபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே உறுதியாகி உள்ளது. அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் டெல்லியில் மீட்கப்பட்டுள்ளதால் இந்த வாலிபரும் டெல்லியை சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். காதல் போட்டியில் டெல்லியைச் சேர்ந்த கூலிப்படையினர் யாராவது 2 பேரையும் கழுத்தை அறுத்து கொன்றிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதேர்ந்த கொலைகாரர்களால் மட்டுமே இப்படி கொடூரமான கொலைகளை செய்து உடலை துணிச்சலுடன் ரெயிலில் ஏற்றி அனுப்ப முடியும்.ஒருவர் மட்டுமே இந்த கொலைகளை செய்திருக்க வாய்ப்பில்லை. 4 அல்லது 5 பேர் சேர்ந்து 2 பேரையும் தலையை துண்டித்து கொன்று இருக்கவேண்டும். போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக பெண்ணின் உடலை டெல்லியில் வீசி விட்டு, ஆணின் உடலை சென்னைக்கு ரெயிலில் ஏற்றி அனுப்பி உள்ளனர். கொலையாளிகள் 4 பேரும் உடலுடன் இருந்த இரும்பு பெட்டியை தூக்கி வந்து ரெயிலில் இருக்கைக்கு அடியில் வைத்திருக்க வேண்டும். இவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கவும் போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கொலையுண்ட 2 பேரின் தலைகளையும் கொலையாளிகள் எங்கு வீசிச் சென்றார்கள் என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. அதனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் டெல்லி போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பெரும் சவாலாக விளங்கும் இந்த கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சேகர் உத்தரவிட்டுள்ளார் டி.எஸ்.பி. பொன்ராம், இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் கொலையுண்ட வாலிபரை அடையாளம் காணவும், கொலையாளிகளை பிடிக்கவும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை உள்ள 27 ரெயில் நிலையங்களில் பெரும்பாலான நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன இந்த கேமிராக்களில் கொலையாளிகள் நிச்சயம் சிக்கியிருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள்.கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை பார்க்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக 4 மாநில போலீசாரின் உதவியையும் சென்னை போலீசார் நாடி உள்ளனர் இந்த வழக்கில் தற்போதைய நிலையில் இந்த கேமராக்களை மட்டுமே போலீசார் மலைபோல நம்பி இருக்கிறார்கள். அது கைகொடுக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?