பலரும் எதிர் பார்த்தது போலவே சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிந்த மறுநாளே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை முகம் தெரிந்துவிட்டது.
கடந்த செப்டம்பர் 22 ம் தேதி தமிழக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார் .
ஆனால் மக்களின் அச்சம் சிறிதளவும் தீராத நிலையில் அணுமின் நிலையம் தொடங்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று இன்று அமைச்சரவையைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் .
அத்தோடு நில்லாமல் எந்த ஒரு தனி மனிதரையோ அல்லது பொதுச் சொத்தையோ அணு அளவுக்குகூட சேதம் விளைவிக்காமல் ஆறு மாதமாக போராடிவரும் அப்பாவி மக்களை கைது செய்து வருகிறார்கள் .இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை போராட்டத்தின் இறுதிக்கட்டமாக இது இருக்கும் என்று கருதுகிறேன் .
கைது நடவடிக்கையை தொடர்ந்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் காலவரையற்ற உண்ணாநிலையைத் தொடங்கியுள்ளார் .மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இடிந்தகரையில் குவிந்து வருகின்றனர் .
வேற்றூர்களில் இருந்து வருபவர்களை தடுக்க ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப் பட்டுள்ளதால் கடலோர கிராம மக்கள் கடல் வழியாக இடிந்தகரையை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர் .
கிளைமேக்ஸ் தொடங்கிவிட்டது ,வெற்றி கூடங்குளம் பகுதி பொதுமக்களுக்கா இல்லை அணு உலைக்கா என்பது விரைவில் தெரிய வரும் என நினைக்கிறேன் .
கைது செய்யப் பட்ட கூடங்குளத்தை சார்ந்த வக்கீல் சிவசுப்பிர மணியன் மற்றும் போராட்டக் குழுவினர் .
கடல் மார்க்கமாக இடிந்தகரை நோக்கி வரும் கடலோர கிராம மக்கள் .
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?