சினிமா கதாநாயகிகள் திரையில் காட்டும் நடிப்பை விட, நிஜத்தில் போடும் வேஷமும் நடிப்பும் அபாரமாய் இருக்கும்.
நான் டாக்டராகியிருப்பேன்… சினிமாவுக்கு வந்தது விபத்து என்றும், டூப்பே போடாமல் சாகஸக் காட்சிகளில் நடித்தேன் என்றும் அவர்கள் சொல்லும்போது முன்பெல்லாம் நம்புவது போலவே ஒரிஜினலாக இருக்கும். இப்போது ரசிகர்கள் தெளிவாகிவிட்டார்கள்.
பேராண்மையில் ஐந்தில் ஒரு ஹீரோயினாக வந்து, இப்போது அரவானில் சோலோவாகிவிட்ட தன்ஷிகா பிழைக்கத் தெரிந்தவர். வாய் ரொம்பவே அதிகம். வாய்க்கு வந்ததை அடித்துவிடுவதில் இவர் பேராண்மை மிக்கவர்தான்.
நாளை ரிலீசாக இருக்கும் அரவானில் நடித்தது குறித்து நிருபர்களிடம் அவர் பேசும்போது, வசந்தபாலனை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். வசந்தபாலன் டைரக்ஷனில் ஒரே ஒரு படத்தில் நடித்தால் போதும். விருது வாங்கிடலாம் என்றார். (அடுத்த படத்துக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்துவிட்டார் போலிருக்கிறது)
அடுத்து அவர் சொன்னதெல்லாம் அரவானில் காமெடி குறைவாக இருக்குமோ என எண்ணத் தூண்டியது.
இதோ ஒரு சாம்பிள்: "அரவான் படத்தில் நான் பல சவாலான காட்சிகளில், துணிச்சலுடன் நடித்தேன். 30 அடி உயரத்தில் இருந்து குதித்து இருக்கிறேன். ஒகேனக்கல் மலையில் இருந்து கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் குதித்து `டூப்' போடாமல் குதித்திருக்கிறேன்… இந்த மாதிரி வேடங்களில் நடிக்கவே ஆசை. நிச்சயம் சூப்பர் ஸ்டாரிணி அந்தஸ்தைப் பெறுவேன்…," என அருள் வராத குறையாக ஆவேசப்பட்டார் அம்மணி!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?