தென்காசி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் சமக தலைவரும், தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் நடிக்கும் விடியல் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
தென்காசி எம்.எல்.ஏ.வும், நடிகருமான சரத்குமார் விடியல் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புன்னகை அரசி சினேகா நடிக்கிறார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் நம்ம நாட்டாமை 3 வேடங்களில் வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசி, அம்பாசமுத்திரம், கடையம், விக்கிரமசிங்கபுரம், சுரண்டை, செங்கோட்டை, புளியரை ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
நேற்று முன்தினம் இப்பகுதியில் ஷூட்டிங் துவங்கியது. கோட்டாரங்குளம் பகுதியில் சரத்குமார், சினேகா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
தொடர்ந்து தென்காசி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் வரும் 15ம் தேதி வரை ஷூட்டிங் நடக்கிறது. இப்படத்தில் நடிகர்கள் ராதாரவி, கஞ்சா கருப்பு, சார்லி, வாகை சந்திரசேகர், நடிகை மல்லிகா, பாத்திமா பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். சுந்தரேசன் மேற்பார்வையில் ஆர்ஆர்ஆர் நிறுவனத்தினர் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?