Sunday 8 January 2012

அநியாயத்துக்கு ��ேல் அநியாயம் செய்யும் மருத்துவம��ைகளும் மருத்துவ���்களும்....!!!




மருத்துவம் சேவை அல்ல!, கொள்ளை...!!!

உயிருக்கு ஆபத்தான நிலை வருகின்ற போது காப்பாற்றிய மருத்துவரை கடவுளை வணங்குவதை போல் வணக்குவது தான் நம்மை போன்ற சாதாரண மனிதர்களின் இயல்பு காரணம் நம்மால் பசியாற உணவு கொடுக்க முடியும் வெயிலில் ஒதுங்க நிழல் கொடுக்க முடியும் மானத்தை மறைக்க ஆடை கொடுக்க முடியும் ஆனால் ஊசலாடி கொண்டிருக்கும் உயிரை காப்பாற்றி கொண்டு வர இயலுமா?

வலியால் துடிப்பவனை வலி மறக்க செய்ய முடியுமா? நிச்சயம் ஆகாது அது ஒரு மருத்துவரால் தான் முடியும் அதனால் தான் சமூகத்தில் மிக உயரிய அந்தஸ்தில் அவர்களை வைத்து பார்க்கிறோம்

ஆனால் கடவுளின் தூதர்களான மருத்துவர்கள் இன்று தங்களது பொறுப்பையும் தகுதி தாரதரத்தையும் மக்களின் நம்பக தன்மையும் உணர்ந்து நடக்கிறார்களா? இல்லை என்று சொல்வதற்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கிறது ஆனால் அது தான் உண்மை.

 பல மருத்துவர்கள் தங்களது தொழிலை மற்றவர்களின் ஆபத்தான நேரத்தில் பணம் பறிக்கும் கருவியாகவே பார்க்கிறார்கள் இதற்கு விதி விலக்காக சில மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்க வில்லை ஆனால் இவர்களது எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது

சென்ற மாதத்தில் ஒரு நாள் எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவருக்கு இரு சக்ர வாகனத்தில் சாலையில் செல்லும் போது விபத்து ஏற்ப்பட்டு கால் எலும்புகள் ஒடிந்து விட்டன உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லிய மருத்துவர்கள் அதற்கு 85 ஆயிரம் செலவாகும் என்றார்கள் அந்த ஆபத்தான நேரத்தில் யோசிப்பதற்கு யாருக்கு தோன்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு சொல்லி கடன் உடன் பட்டு பணத்தை கட்டி விட்டார்கள்.

 பிறகு அந்த நோயாளியின் மருத்துவ அறிக்கைகளை பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காட்டி இதற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்தப் போது 35 ஆயிரம் இருந்தால் முடித்து விடலாம் என்றார்கள் நாகர்கோவிலுக்கும் பாண்டிச்சேரிக்கும் தொலைவு சற்று அதிகம் தான் அதற்காக மருத்துவ கட்டணத்தில் கூடவா இவ்வளவு அதிகம் தொலைவு இருக்கும்.

இது உதாரனத்திற்கு நான் சுட்டிக் காட்டிய சிறிய சம்வம் இதை விட கசப்பான கொடுமையான சந்தர்ப்பங்கள் பலவற்றை தினசரி மக்கள் அனுபவித்து வருகிறார்கள் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்று டாக்டரிடம் எடுத்து போனால் குறைந்த பச்சம் ஐநூறு ரூபாயாவது தேவை படுகிறது சாதாரண காய்ச்சலுக்கே ஒரு நாளையில் இத்தனை ரூபாய் செலவு என்றால் சாதாரண ஏழை ஜனங்களால் அதை எப்படி சமாளிக்க முடியும்..??

 இன்றும் நம் நாட்டில் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாத மக்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் இவர்களால் அபாய நேரத்தில் மருத்துவ மனை வாசலை கூட மிதிக்க முடியாத நிலை தான் இந்த நிமிடம் வரை இருக்கிறது.

எழைகளுக்காகத்தான் அரசு மருத்துவ மனைகள் இருக்கின்றனவே அங்கே சென்று இலவச சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா என்று சிலர் சிந்திப்பது நியாயம் தான் ஆனால் அரசாங்க மருத்துவமனைகளின் உண்மையான நிலையை நேரில் சென்று பார்க்கும் போது ஆரோக்கியமான மனிதர்களே தலை சுற்றி விழுந்து விடுவார்கள் நாய் கடிக்கு ஊசி போட வேண்டும் என்றால் கூட செவிலியர்களுக்கு தனியாக பணம் கொடுத்தால் தான் நடக்கும் இல்லை என்றால் மருந்தே குளிர் சாதன பெட்டியில் உறங்கி கொண்டிருந்தாலும் இல்லை என்று இறக்கமே இல்லாமல் சொல்லிவிடுவார்கள் நடந்து நடந்து நாய் போல குறைத்து சாக வேண்டியது தான் ஏழைகளின் தலை எழுத்தாக இருக்கிறது.

 அரசாங்க மருத்துவ மனைகள் சவக்கிடங்குகளாக காட்சியளிக்கும் இந்த நாட்டில் பல தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர ஓட்டல்களாக மின்னுகிறது ஒரு கண் அறுவை சிகிச்சைக்கு ஒரு தனியார் மருத்துவமனை விலை பட்டியலை தருகிறது பத்தாயிரம் ரூபாய்,அறுபதாயிரம் ரூபாய்,ஒன்னேகால் லட்ச்ச ரூபாய் என்பது அந்த பட்டியலில் உள்ள விலை விபரம் இது மூன்று விதமான நோய்களுக்கான சிகிச்சை கட்டணமாக இருக்குமென்று யாரவது நினைத்தால் அவர்கள் முழுமையான அப்பாவிகள்...!

ஒரே நோய்க்கு தரும் மூன்று விதமான கட்டண விபரம் தான் இது அப்படி என்றால் பணத்தை பொறுத்து தான் எங்கள் சிகிச்சையின் தரம் இருக்கும் என்பது தானே பொருளாகும் உயிரை பார்த்து செய்ய வேண்டிய மருத்துவம் பணத்தை பார்த்து செய்தால் அதில் மனிதாபிமானம் என்பது எங்கே இருக்கும்.

ஆகவே அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் நோய் வந்தால் ஒன்று சகித்துக் கொண்டு வாழ வேண்டும் அல்லது வேறு வழியே இல்லை சாக வேண்டும் இது தான் நமது நாட்டின் ஆரோக்கிய வாழ்வின் எதார்த்த நிலை ஆங்கில வைத்தியம் என்று இல்லை மாற்று மருத்துவ முறைகளான அனைத்துமே பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது என்று சொன்னால் அதிலும் தவறு இல்லை

மருத்துவர்கள் வாங்கும் கட்டணம் ஒரு புறம் என்றால் மருந்துகளின் விலை ஏற்றம் இன்னொரு புறம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெறும் ஒன்பது ரூபாய்க்கு விற்ற metrogyl Gel என்ற மருந்து இன்று முப்பது ரூபாய் எதற்க்காக அதன் விலை இத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்று யாரும் கேட்க முடியாது.

 கேட்டாலும் இந்த ஜனநாயக நாட்டில் பதில் கிடைக்காது விலை ஏற்றம் செய்யும் அளவிற்கு அதன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்த மருந்து கம்பெனி சொல்லுமே ஆனால் இது வரை தரமற்ற மருந்தை எதற்காக விற்றீர்கள் என்று நான் கேட்டால் அது ஜனாயக விரோதமாகி விடும் இது தான் நம் நாட்டின் இன்றைய நிலை

இந்த நிலையில் தான் நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் மருந்துகளின் விலை குறைய வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது ஒன்று தான் அம்மா நீங்கள் வேண்டுகோள்விடும் நிலையில் இல்லை கட்டளை இடும் நிலையில் உள்ளிர்கள்...

 ஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை சதவிகிதம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுங்கள் கோடான கோடி இந்தியர்கள் குலதெய்வமாக உங்களை கையெடுத்து வணக்குவார்கள் ஆனால் என்ன செய்வது நான் வெறும் அலங்கார பொம்மை தானே என்று சொல்விர்கள் நிஜம் தான் அலங்கார பொம்மைகள் அவசியத்திற்கு உதாவாது என்று எங்களுக்கும் தெரியும் இருந்தாலும் ஒரு நப்பாசை சொல்லி தான் பார்ப்போமே என்று...

நன்றி : உஜிலாதேவி.

இது ஒரு மீள்பதிவு.



http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-sexygirls.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger