: அஞ்சலியின் தாராள மனசு!
நடிகை அஞ்சலியின் தாராள மனசைத்தான் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் கொண்டாடி மகிழ்கிறது. அப்படியென்ன தாராள மனசுடன் நடந்து கொண்டார் அஞ்சலி? திரைத்துறைக்கு வந்த காலத்தில் தன்னுடன் நடித்த புதுமுக நடிகர்களை இன்னமும் மதித்துக் கொண்டிருப்பதுதான் பாராட்டுக்களுக்கு காரணம்.
நடிகை அமலா பால் தன்னுடன் ஆரம்பத்தில் நடித்த சின்ன சின்ன நடிகர்களை எங்காவது பார்த்தாலோ, அல்லது அவர்கள் போன் லைனில் வந்தாலோ கூட மதிப்பதில்லையாம். இதை சொல்லி சொல்லி புலம்புகிறார்கள் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் இவருடன் நடித்த ஹீரோக்கள்.
ஆனால் அஞ்சலி அப்படியல்ல. இன்னமும் இவரது மனப் புத்தகத்தில் புதுமுகங்களுக்கு இடம் இருக்கிறது. நல்ல கேரக்டர் வந்தா போதும். அதுல யாரு எனக்கு ஜோடியா நடிக்கிறாங்கன்னு நான் பார்ப்பதே இல்லை என்று சொல்லும் அஞ்சலி, இப்போது விக்ரமுடன் கரிகாலன் படத்தில் நடிக்கிறார். விக்ரமுடன் நடித்துக் கொண்டிருக்கும் போதே, மதன் என்ற புதுமுகத்துடன் ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டார் அஞ்சலி. இந்த மதன் இதுதாண்டா போலீஸ் ராஜசேகரின் சகோதரி மகன் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?