சூர்யா, கமல் மகள் ஸ்ருதி ஜோடியாக நடித்த 7ஆம் அறிவு படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு குங்பூ என்ற தற்காப்பு கலையை அறிமுகப்படுத்திய தமிழர் போதிதர்மர் கதையே இப்படம்.
இதில் தமிழர் பெருமை பேசும் வசனங்கள் பல உள்ளன. குறிப்பாக ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலும் மறைமுகமாக காட்டப்பட்டு உள்ளது. தமிழன் தோற்ககூடாது இலங்கையில் தமிழன் தோற்றதற்கு காரணம் சில நாடுகளின் கூட்டு சதிதான் என்பன போன்ற வசனங்கள் இடம் பெற்று உள்ளன. இதற்கு இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியது. அங்கு இப்படத்தை வெளியிட அனுமதி மறுத்து மறு தணிக்கைக்கு அனுப்பினர்.
சிங்களர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இருந்த வசனங்களை நீக்கி விட்டு படத்தை வெளியிட அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் கூடுதல் தியேட்டர்களில் 7ஆம் அறிவு திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. வடபழனி கமலா தியேட்டரில் இப்படத்தை மாற்றிவிட்டதாக வெளியான தகவலை மறுத்து அத்தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்
எங்கள் கமலா திரையரங்கில் 7ஆம் அறிவு படம் முதல் வாரத்தின் 2 திரையரங்கில் திரையிட ஒப்பந்தம் செய்திருந்தோம். 3-ம் வாரத்தில் இருந்து "ஒப்பந்தப்படி ஸ்கிரீன் 1-ல் 7 ஆம் அறிவும், ஸ்கிரீன் 2-ல் வேலாயுதம் திரையிடப்படமும் திரையிடப்பட்டு 2 படங்களும் எங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது,
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?