'மங்காத்தா' படத்தினை தொடர்ந்து, த்ரிஷா விஷாலுடன் 'சமரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
த்ரிஷாவிற்கு கல்யாணம் செய்ய இருக்கிறார்கள் அதனால் தான் படங்களை ஒப்பு கொள்ளாமல் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர், இப்போதைக்கு தனக்கு கல்யாணம் இல்லை என்று அறிவித்தார்.
த்ரிஷா தெலுங்கு சினிமாவில் தற்போது 'பாடிகார்ட்' படத்தில் வெங்கடேஷுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
முதலில் அப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனவர் ஸ்ருதிஹாசன். பிறகு கால்ஷீட் பிரச்னையால் ஸ்ருதிக்கு பதிலாக காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்ய நினைத்து அவரை அணுக, காஜல் கேட்ட சம்பளத்தால் திணறிப் போய், தற்போது த்ரிஷாவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
த்ரிஷாவுடன் இணைந்து 'கோ' படத்தில் நாயகியாக அறிமுகமான கார்த்திகாவும் நடிக்க இருக்கிறார். முதல் நாயகியாக த்ரிஷாவும் இரண்டாம் நாயகியாக கார்த்திகாவும் நடிக்க இருக்கிறார்கள். படத்திற்கு ' தாமு ' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?