வருமா வராதா என்ற விஜய் ரசிகர்களின் ஏக்கத்தை இன்று காலையிலேயே துடைத்து துர எறிந்திருக்கிறது அந்த விளம்பரம். சென்னை மற்றும் புறநகரை சுற்றியுள்ள தியேட்டர்களில் எந்தெந்த தியேட்டர்களில் வேலாயுதம் ரிலீஸ் ஆகிறது என்ற தகவலுடன் வந்திருக்கும் இந்த விளம்பரம், அதி முக்கியமானது. ஏனென்றால் குழப்பம் தீர்த்த கோமேதக தகவலல்லவா அது?
இந்த தீபாவளியை இன்பமாக்கும் இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் இன்னொரு விஷயத்தை கவனித்தார்களா தெரியாது. ஆனால் சூர்யா ரசிகர்கள் கவனித்ததால் இரு தரப்பினருக்கும் ஒரு சின்ன ஈகோ ஓடிக் கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது. இதே சென்னை மற்றும் புறநகர் தியேட்டர்கள் 7 ஆம் அறிவு படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த தியேட்டர்களின் விபரங்களை இன்று இப்படத்தின் விளம்பரங்களிலும் அறிவித்திருக்கிறார்கள்.
அதன்படி பார்த்தால் 7 ஆம் அறிவு 47 தியேட்டர்களிலும், வேலாயுதம் 38 தியேட்டர்களிலும் வெளியாவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இது சென்னை நிலவரம்தான். வெளியூர்களில் எப்படி என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.
யார் யாரை முந்திக் கொள்வார்கள் என்பதை ஸ்கிரீனிங் தீர்மானிக்கிறதோ, இல்லையோ? கலெக்ஷன் தீர்மானிக்கும்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?