"Service Unavailable" இந்த மெசேஜ் நம்மில் நிறைய பேருக்கு பரிச்சயமாக இருக்கும். ரயில் டிக்கெட்டை, IRCTC வெப் சைட்டின் மூலம் புக் செய்ய பழகி இருக்கும் எந்த ஒரு தத்தா பாட்டியும், இந்த Error மெசேஜை அவர்கள் வாழ்கையில் பார்த்திராமல் சாக முடியாது.
சரி. ஏன் இந்த மெசேஜ் வருகின்றது?
"120 கோடி மக்கள் தொகை உள்ள இந்திய திருநாட்டில் வாழும் மக்கள் எல்லாருடைய தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது" என்று நம்மூர் அரசியல்வாதிகள் சொல்வதை தான், IRCTC சைட்டும் நமக்கு எடுத்துரைக்கிறது.
நான் மாதம் ஒரு முறை ஊருக்கு செல்லும் போதும், பல் விலக்காமல் கண் துடைக்காமல், காலையில் 7 :55 -க்கு அவசர அவசரமாய் எழுந்து, டிக்கெட் Tatkal -லில் ரிசர்வ் செய்ய கணினி முன் உட்கார்ந்தால், என்னை போல ஊருக்கு செல்லும் கணினி துறை கண்மணிகளும், மற்ற ஏனையவர்களும் பல்துலக்கி காலை கடன் முடித்து எக்ஸாமுக்கு செல்வது போல, பயங்கர prepared -ஆக உட்கார்ந்து, IRCTC சைட்டில் Login ஆகி, Refresh பட்டனை அமுக்கி கொண்டு உள்ளார்கள்.
சரியாக எட்டு மணி ஆனதும், பயணம் செய்யும் விபரம் டைப் செய்து, Submit பட்டனை அமுக்கியதும், சர்வருக்கு சென்றடையும் லட்சக் கணக்கான HTTP request -களில், சீக்கிரம் வரும் Requests -களின் தேவைகள் மட்டுமே சர்வர்கள் பூர்த்தி செய்கின்றன. Slow நெட்வொர்க் கனெக்சனில் திருவாரூர் தேர் போல மெதுவாய் ஆடி அசைந்து செல்லும் HTTP requests -கள் அப்படியே வந்த வழியே திருப்பி அனுப்பப் படுகின்றன.
இது என்ன திருப்பதி லட்டா? வருகின்ற எல்லோருக்கும் கொடுப்பதற்கு.
பொங்கல், தீபாவளி நாட்களில் இது இன்னும் பெரும் பிரச்சினை.
டிக்கெட் கிடைத்தால் தீபாவளி.
இல்லையென்றால் முதுகு வலி.
தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், நெடுஞ்சாலை குழியில், "சுறா" "ஏகன்" படங்களை பார்த்து கொண்டே சென்றால், முதுகு வலியோடு "தல" வழியும் சேர்ந்து கொள்ளும். கொல்லும்.
ஹை ஸ்பீட் நெட்வொர்க் கனெக்சன்களில் இந்த பிரச்சினை மிக குறைவு. கோயில்களில் அதிக காசு கொடுத்து சிறப்பு கட்டண வழியில் சென்று எளிதாய் கடவுள் தரிசனத்தை பெறுவது போலதான்.
அதனால், ஆன் சைட்டில் வேலை செய்யும் நம் நண்பர்களிடம் சொல்லி டிக்கெட் புக் செய்ய சொல்ல வேண்டும். அங்கெல்லாம் நெட் ஸ்பீட், அதி வேகம் தான். அதுவும் சரியான விலையிலே கிடைக்கும்.
அங்கெல்லாம் எப்போதே 3G -யை தாண்டி, 4G -க்கு சென்று விட்டார்கள். 5G -யில் research செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொஞ்ச வருடங்களில் வந்து விடும் என்கிறார்கள். ஆனால் இங்கு 3G -க்கே இன்னும் அடிதடி. அதிக விலையில்.
நம் நாட்டில் மொபைல் சர்வீஸ் நிறுவனங்களைப் போல, பிராட் பேண்ட் சர்வீஸ் நிறுவனங்களும் நம்மை வெகுவாய் ஏமாற்றி கொண்டு உள்ளன.
வார இறுதிகளில், ரயிலில் செல்லும் முக்கால்வாசி பேர்கள் இந்த ஐ.டி துறையினர்கள் தான். இவர்கள் விடும் சீன்கள் அளப்பற்றது. எங்கே பார்த்தாலும்,
"பிராஜெக்டில் போட்டுட்டாங்களா இல்லையா?",
"எவ்வளவு pay?"
"அந்த மேனேஜர் அப்படி பண்றார்."
"ஆன் சைட் கிடைச்சிடுச்சா? விசா வாங்கிட்டியா?"
இப்படி தொனந்தொனன்னு கண்டது பேசிகிட்டே வர்றாங்க. என்னாலேயே சகிக்க முடியல. இந்த ரயிலுக்கு கூட இனி "சேரன் எக்ஸ்பிரஸ்", "பாண்டியன் எக்ஸ்பிரஸ்" ங்கறதை மாற்றி, "ஜாவா எக்ஸ்பிரஸ்", "டாட் நெட் எக்ஸ்பிரஸ்" ன்னு வச்சிடுங்கப்பா!
தற்போது ரிலையன்ஸ் 3G -க்கு டிவியில் விளம்பரம் சில போட்டு கொண்டு இருக்கிறார்கள். ரயில் தண்டவாளத்தின் மேல் நின்றிருக்கும் வாகனத்தில் ஒருத்தன் கையிற்றால் கட்டி வைக்கப் பட்டிருப்பான். ரயிலும் தூரத்தில் வந்து கொண்டிருக்கும். பக்கத்தில் ரிலைன்ஸ் நெட் கனேக்சனுடன் ஒரு லேப்டாப் இருக்கும். கட்டப்பட்ட கையுடன், முடிச்சை எப்படி அவிழ்பதென்று, அவர் நெட்டில் ப்ரௌஸ் செய்து கண்டுபிடித்து ரயில் வந்து மோதுவதற்குள் தப்பிப்பாராம்.
என்ன ஒரு மூளை!! இந்த விளம்பரத்தை யோசித்தவனுக்கு. அவனை இதே மாதிரி தண்டவாளத்தில் கட்டிவச்சிட்டு, முடிஞ்சா தப்பிச்சுக்கோ அப்படின்னு சொல்லிட்டு போயிடனும்.
இதே டைப்பில் இன்னும் சில ரிலைன்ஸ் 3G விளம்பரங்கள் உள்ளன.
அந்த வீடியோவை பார்த்து வியப்படையுங்கள்.
ஆபிசில் உட்கார்ந்து மிகவும் பயந்து பயந்து, பேஸ்புக் பார்க்க வேண்டி இருக்கா? கவலையே படாதிங்க.
இந்த மாதிரி கஷ்டப் பட்டு, பேஸ்புக் பார்ப்பவர்களின் நலன் கருதி, சில மாதங்களுக்கு முன்பே உங்களுக்காகவே உருவாக்கி, ஒரு வெப்சைட்டை வெளியீட்டு இருக்காங்க .
http://www.hardlywork.in/
வெப்சைட் பெயரே கலக்கலாக இருக்குல்ல. உள்ளே போகும் முன், ஒரு மெசேஜ் காண்பிக்கிறது.
"Okay hang in there you little corporate warrior you"
இதை விட உங்களை யாராவது கலாய்க்க முடியுமா?
இந்த வசதி தற்போது ட்விட்டருக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.
என்ன, ஒரே ஒரு பிரச்சினை! நீங்கள் எல்லா அப்டேட்களையும், பார்க்க மட்டுமே முடியும். Reply பண்ணவோ, கமெண்ட் பண்ணவோ முடியாது.
கூடிய சீக்கிரம் கூகிள் பிளாகுக்கு இந்த வசதியை கொண்டு வந்து விட்டால் பரவாயில்லை. ஹீ! ஹீ!
மங்காத்தாவை எனக்கு நிஜமாய் பிடிக்கவில்லை. சும்மா வெட்டி பந்தாவுக்காக எல்லாம் சொல்லவில்லை. பிளாக்கிலும் மங்காத்தாவை இதுவரை யாரும் கடுமையாய் விமர்சித்து, நான் பார்க்கவில்லை.
எல்லோருக்கும் அஜீத் ரசிகர்களின் மேல், அவ்வளவு "பய" பக்தியா? எனக்கும்தான்.
படத்தை விட, படத்தில் அஜீத் கெட்டவனாய் நடித்தது பயங்கரமாய் பேசப் படுகிறது. என் ஆபிசில் அருகில் உட்கார்ந்திருக்கிற பெண் "கடைசியில் அட்லீஸ்ட் த்ரிஷாவுடன் சேர்ந்து சந்தோசமாய் வாழ்வது போல யாவது முடித்திருக்கலாம்." என்றார்.
நம் தமிழ் மக்கள் எல்லோரும் அவ்வளவு நல்லவர்களா?
நம்மை சுற்றி நல்லது மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறதா?
நடிகர்களை எல்லாம் தெய்வங்களாக நினைக்கும் நாட்டில், இதை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? நம் மக்கள் உண்மையை ஏற்று கொள்ளவே மறுக்கிறார்கள். ஹாலிவுட்டை அரைத்து மசாலா போல, மொக்கையாய் பண்ணிய இதுக்கே இப்படி என்றால்? கஷ்டம்! தமிழ் சினிமாவின் எதிர்காலம்.
"மங்காத்தா, ஹாலிவுட்டுகே சவால் விடும் படம்".
"வெங்கட் பிரபு ஒரு சினிமா மாமேதை"
அப்படின்னு சும்மா ஹிட்ஸ் வர்றதுக்காக, என்னாலும் அட்டகாசமாய் ஒரு விமர்சனம் எழுத முடியும்.
அதிலும் இந்த வெங்கட் பிரபுவும், வெற்றி மாறனும், எதோ ரொம்ப நாளாய் கஷ்டப் பட்டு சாப்பிடாமல் சிலை செதுக்கியது போல், தாடி வளர்த்து கொண்டு விடும் சீன்கள் ஓவர். அடிக்கடி தாடியை வேற, தடவிகிட்டே பேசுறது அலம்பலின் உச்சக்கட்டம்.
நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது!!!
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-vaanam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?