Sunday, 18 September 2011

அணு உலைகள்... அவசி���மா? ஆபத்தா?



மறியல், கடையடைப்பு, உண்ணாவிரதம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என சத்யாகிரகம் செய்து வருகின்றனர் பொதுமக்கள். கடந்த 2 மாதங்களாக கொந்தளித்து கிடக்கின்றன தென் மாவட்ட கடற்கரையோர கிராமங்கள்.


ஏதோ குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்காகவோ, சாலை, பஸ் வசதி கேட்டோ இந்த போராட்டம் இல்லை. மனித உயிருக்கு உலை வைக்கும் அணு உலையை எதிர்த்து ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுத்து வருகின்றனர் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள். இந்தியாவில் 1948ல் பாபா அணு ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டது. 1969ம் ஆண்டில் இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் தாராப்பூரில் இயக்கத்தை தொடங்கியது. தற்போதைய நிலையில் இந்தியாவில் 20 அணு உலைகள் மூலம் 4 ஆயிரத¢து 780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 7 அணு உலைகள் கட்டுமான நிலையில் உள்ளன. யுரேனியம், புளூட்டோனியம் அணுக்களின் கருவில் உள்ள சக்தியே அணுசக்தி ஆகும். அணு உலைக்குள் அணு எரிபொருள் பிளவுறுதல் மூலம் வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பத்தின் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.


இந்தியாவில் 1947ல் மின்சார உற்பத்தி 1,300 மெகாவாட்டாக இருந்தது. தற்போது ஒரு லட்சத்து 73 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப் படுகிறது. எனினும் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. 2030ம் ஆண்டில் மின்சாரத்தின் தேவை 4 லட்சம் மெகாவாட்டாக இருக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. இந்தியாவில் அடிப்படை தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி என ஆகியவற்றையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அடுத்த 20 ஆண்டுக ளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இந்தியாவிடம் நிலக்கரி, எண்ணெய் போன்ற எரிபொருட் களின் இருப்பு குறைவாக உள்ளது. 1000 மெகாவாட் அணு மின் உற்பத்திக்கு ஒரு ஆண்டிற்கு 30 டன் எரிபொருள் (யுரேனியம்) தேவை. ஆனால் 1000 மெகாவாட் அனல் மின் உற்பத்திக்கு ஒரு ஆண்டுக்கு 43 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி அல்லது 20 லட்சம் டன் எண்ணெய் தேவைப்படுகிறது. நீர் மின்சார உற்பத்திக்கு போதிய நீர் ஆதாரங்கள், அணைகள் இல்லை. சூரிய சக்தி ஆதாரம் ஒரு சில மண்டலங்களில் மட்டுமே கிடைக்கிறது. காற்றாலை மின்சாரம் சில கால கட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. எதிர்கால மின்சார தேவையை சமாளிக்க அணுசக்தியால் மட்டுமே முடியும். இதற்காக தான் அணு மின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது என அணு மின் நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.


ஆனால் கோடிகளை கொட்டி மனித சமுதாயத் துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலில் அணு மின்சாரம் தயாரிக்க வேண்டுமா என்பது தான் பொதுமக்களின் ஒரே கேள்வி. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை மின்சாரம் என எத்தனையோ வழிகள் இருக்கும் போது கதிர்வீச்சு ஏற்பட்டால் மக்களைக் கொல்லும் பேராபத்து கொண்ட அணு உலைகள் தேவை தானா என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.


நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 13 ஆயிரத்து 171 கோடி மதிப்பீட்டில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 1, 2 அணு உலைகள் அமைக்கப் படுகின்றன. இவை தவிர 3, 4, 5, 6 என தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறனுள்ள நான்கு அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன.
இந்தியாவிலேயே முதன்முதலாக இங்கு தான் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. அணு உலைகளில் பயன்படுத்தும் எரிபொருளான செறிவூட்டப் பட்ட யுரேனியம் ரஷ்யாவில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் மீன்பிடி தொழில் செய்யக் கூடாது. 2 கி.மீ., சுற்றளவிற்குள் அணுமின் நிலைய கட்டடிங்களை தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது. 5 கி.மீ., சுற்றளவிற்குள் 'ஸ்டெரிலைஷேசன் ஷோன்' எனவும் அறிவித்துள்ளனர். அப்படியானால் மனிதர்கள் வசிக்கக் கூடாது எனவும் கூறப்படுகிறது. 5 கி.மீ., முதல் 16 கி.மீ.,க்குள் 10 ஆயிரம் மக்களுக்கு மேல் வசிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனால் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கும் போது தங்கள் வாழ்வாதாரமே பாழாகி விடும் என்கின்றனர் கூடங்குளம் பகுதி மக்கள்.
அணு உலைகளை குளிர்விக்க கடல் தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீர் பின்னர் அப்படியே கடலுக்கு செல்கிறது. இதனால் கடல் தண்ணீரில் கதிர்வீச்சு ஏற்பட்டு கடல் வாழ் இனங்கள் பாதிக்கப்படும். கடல் மீன்களை சாப்பிடும் மனிதர்களும் கத¤ர்வீச்சால் பாதிக்கப்படுவர். மீன் இனங்களே இருக்காது. பொதுமக்களின் உணவே கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர் அணு உலை எதிர்ப்பாளர்கள்.


இதுகுறித்து அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் உதயகுமார் கூறுகையில், மக்களுக்கு மின்சாரம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகளை பாதிக்காத வகையில் மின்சாரம் தயாரிக்க வேண்டும்.


அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் காற்று, தண்ணீரில் கதிர்வீச்சு தன்மை இருக்கும். உணவு, பழங்கள், காற்று அனைத்திலும் கதிர்வீச்சு பாதிப்பு உணரப்படும். இதனால் கருச்சிதைவு, குழந்தை இன்மை, புற்றுநோய், மன வளர்ச்சி இல்லாத குழந்தைகள் என எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர். ஜப்பான் நாட்டில் அமெரிக்க தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான் அணு உலை அமைக்கப்பட்டது. அங்கு சுனாமி வந்த போது என்ன நிகழ்ந்தது? அப்படி இருக்கும் போது ரஷ்ய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் அணு உலைகளுக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்பில்லை. இது மட்டுமல்லாது தீவிரவாதிகள் அணுமின் நிலையங்களை குறிவைத்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சரே கூறியுள்ளார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சுற்று வட்டாரத்தில் மனித உயிரினமே இருக்காது. எனவே அணு உலைகளை மறந்து விட்டு மாற்று வழி மின் சக்தியை மத்திய அரசு யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் அணு உலைகளுக்கு எதிராக தொடங்கியுள்ள போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு நிர்வாகம் திணறி வருகிறது. மக்களின் பயன்பாட்டிற்கு தான் மின்சாரம். அந்த மின்சாரம் மனித உயிரையே குடிக்கும் என்றால் மாற்று வழியை யோசிக்கலாமே!

நன்றி:தினகரன்.

(அணு உலையில் யுரேனியம் பிளக்கப்படும்போது வெளியாகும் கதிரியக்கப் பொருள் சிசியம்.செர்னோபில் விபத்தின் போது நூறாயிரம் நூறாயிரங்கோடி செசியம் அணுக்கள் வெளியேறி காற்றில் கலந்தன. சிசியத்தின் தாக்கம் 30 ஆண்டுகளுக்கு இருக்குமாம்.இந்தக் கதிரியிக்கத்தின் விளவாகப் பாதிக்கப்பட்ட,படப்போகும் உயிர்களெத்தனை?இந்தச் சிசியத்தைத் தாவரங்கள் கிரகித்துக் கொள்வதால் ஏற்படும் கோர விளைவுகள் என்ன?இதெல்லாம் நினைத்தால் உறக்கம் வருமா?)



http://tamilfashionshow.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger