நடிகை குத்து ரம்யா சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல் காந்தி மீதுள்ள பற்றால் அக்கட்சியில் இணைந்ததாக தெரிவித்தார். பின்னர் காங்கிரஸ் சார்பில் நடந்த பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார். ரம்யாவுக்கு கர்நாடக காங்கிரசில் தனி கோஷ்டி உருவானது.
இது அங்குள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கட்சியில் திடீரென சேர்ந்த அவர் முன்னணி தலைவர்களுக்கு இணையாக செயல்படுவதாக ஆதங்கப்பட்டனர்.
இதற்கிடையில் அக்டோபர் 12-ந் தேதி நடைபெற உள்ள இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் தலைவர் பதவிக்கு ரம்யா போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். ரம்யாவும் அதனை ஏற்று தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் காந்தி நகர் சட்ட மன்ற தொகுதியில் வாக்குச் சாவடி அளவில் நடந்த கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ரம்யா இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. மேலிட தேர்தல் பார்வையாள ரிடமும் புகார்கள் குவிந்தன. கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடாது என விமர்சித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருந்தன. இதையடுத்து ரம்யா போட்டியில் இருந்து விலகினார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட கடைசி நாள் வரை அவர் மனு தாக்கல் செய்யவில்லை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?