Friday, 7 August 2015

Sakalakala Vallavan Movie Tamil review

இதுவரை வந்த கமர்ஷியல் படங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பிட்டு பிட்டாய் வெட்டி எடுத்து ஒரு கலர் ஃபுல் காஸ்ட்டியூம் தைத்துவிடுவார் இயக்குனர் சுராஜ். இதிலும் அது தொடர்ந்திருக்கிறது. சூரியின் காமெடி, த்ரிஷா-அஞ்சலியின் கலர்ஃபுல் & கிளாமரான தோற்றம் என சக்கைபோடு போடுகிறான் சகலகலா வல்லவன்.

அப்பா சொல்லை மீறாத பிள்ளையான ரவி, பிராபுவின் சொல்லைக் காப்பாற்ற காதலித்த பெண்ணாண அஞ்சலியை மறந்து, த்ரிஷாவை மணக்கிறார். (இது ஒரு படத்தை நியாபகப்படுத்துகிறதா?). சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்டுவிட்ட திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள நினைக்கும் த்ரிஷாவிடம், நான் உன் வீட்ல இருந்தா மாதிரி நீ என் வீட்ல ஒரு மாசம் இரு. நான் டைவர்ஸ் தரேன் என வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். (இதுவும் ஒரு படத்தை நியாபகப்படுத்துகிறதா?)

அந்த ஒரு மாதத்தில் ஜெயம்ரவியின் குடும்பம் த்ரிஷாவை எப்படி மாற்றுகிறார்கள் என்பது க்ளைமாக்ஸாக இருந்திருந்தால் சகலகலா வல்லன் நம்மை ஏமாற்றியிருப்பான். த்ரிஷா டைவர்ஸ் பத்திரத்தை வாங்கிக்கொண்டு போய்விட, எப்படித் தான் இருவரும் சேர்கிறார்கள் என்பது ஆர்ப்பாட்டமான க்ளைமாக்ஸ்.

படம் முழுக்க அலப்பறை செய்துவரும் சூரியை, சில நிமிடங்கள் வரும் விவேக் ஓவர்டேக் செய்கிறார். 5 நிமிடத்தில் 500 டபுள் மீனிங் வசனங்கள் பேசுகிறார். (சில வசனங்கள் வீட்டுக்கு போன பிறகு தான் புரியும்). விவேக்கின் மொட்டை கதாபாத்திரம் சிரிக்க வைக்க, சால்ட் & பெப்பர் லுக் விவேக் எரிச்சல்.

'நான் கடவுள்' ராஜேந்திரன் போலிஸ் உடையில் அதட்டுகிறார். பறந்து பறந்து அடிப்பது, பஞ்ச் வசனங்கள் பேசுவது என ஆரம்பித்து, எந்திரன் ரோபோட் வேடம் போடுவதெல்லாம் வேற லெவல் காமெடி. சிரித்து சிரித்து வாய் வலி வருவது உறுதி.

பெரிய வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சிறுபிள்ளைத்தனமான கேரக்டரில் ஜெயம் ரவி கலக்குகிறார். அப்பா பாசத்தில் மூக்கால் அழுது வசனம் பேசுவது, குடித்துவிட்டு டான்ஸ் ஆடுவது என பல வருடங்களுக்கு முன்பு பார்த்த விஜய் சேதுபதி மீண்டும் கண்முன். 'குடி' என்றதும் தான் நினைவிற்கு வருகிறது. த்ரிஷா துரத்திவிட்டதால் குடித்துவிட்டு ஆட்டம் போடும் 'பல்பு வாங்கிட்டேன் மாமா பல்பு வாங்கிட்டேன்' பாடலின் துள்ளல் இளைஞர்களுக்கான கொண்டாட்டம்.

பாடல் என்றதும் நினைவிற்கு வருவது இந்த படத்தின் முதல் பாடல் தான். 'ஹிட்டு சாங்கு' என குத்தாட்டம் போடும் பூர்ணா ஜொலிப்பு. பூர்ணாவின் ஆட்டத்தை பார்த்துவிட்டு அஞ்சலியின் ஆட்டமெல்லாம் எம்மாத்திரம் என தோன்றுவது இயல்பே. வயதாகிவிட்டதால் இப்போதெல்லாம் த்ரிஷா சிரமமெடுத்து நடனமாடுவதில்லை என்ற பேச்சு கோலிவுட்டில் நிலவிவந்தது. 'புஜ்ஜிமா புஜ்ஜிமா' பாடலில் ஜெயம் ரவிக்கு இணையாக பின்னி பெடலெடுத்திருக்கிறார். தாவணியில் ஜிவ்வ்வ்வுனு வரும் அஞ்சலி மாடர்ன் டிரஸ்ஸில் தொப்பையுடன் டான்ஸ் ஆடுவதை பார்த்த உடனேயும் சகிக்கவில்லை. பார்க்க பார்க்கவும் பிடிக்கவில்லை.

பக்கா கமெர்ஷியல் என்பதால் கலகலப்பை மட்டுமே கொடுக்கிறது சகலகலாவல்லவன். இளம்புயல் பட்டத்தை வைத்துக்கொண்டு சாதாரண ரௌடிகளை அடித்தும், பீர் பாட்டிலை தலையில் உடைத்தும் தனது ஆக்‌ஷன் ப்ளாக்கை ரவி முடித்துக்கொண்டது சிறிய வருத்தம். காமெடி, காதல், க்ளாமரில் மட்டும் சகலகலாவல்லவன் தேறுகிறான்.

சகலகலாவல்லவன் – ரகளை செய்கிறான்!

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger