Wednesday, 21 January 2015

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-1 Micromax Canvas A1 Review

செமையா இருக்குப்பா நம்ம ஊரு மொபைலு - மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் A1 அசத்தும் அமோசனின் ஆபர் !

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-1 ஒரு சின்ன ரிவ்யூ பார்க்கலாமா ?

எப்பவுமே இந்திய தயாரிப்புகள் எதாவது ஹிட்டடிச்சா அதுல ரெண்டு உண்மை இருக்கும் ஒண்ணு அது நீடிச்சு உழைக்கும் ரெண்டு விலை குறைவா இருக்கும் . டிவிஎஸ் 50 மொபட் இப்படித்தான் ஜெயிச்சது. அதே மாதிரி 100% இந்திய தயாரிப்பான மைக்ரோமேக்ஸ் மொபைல்ஸும் இன்னிக்கு "நம்பிக்கை நாணயம் கைராசி"ன்னு விளம்பரம் போடுமளவிற்கு தனி டிராக்கை பிடிச்சுடுச்சு.

லாலிபாப்பிற்கு குழந்தைகள் ஆசைப்படுகின்றன என்றால் ஆன்ட்ராய்ட் லாலிப்பாப்பிற்கு பசங்களும் பொண்ணுகளும் ரொம்பவே வெயிட்டிங். ஆன்ராய்ட் லாலிபாப் அப்டேட் செஞ்சா மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் A1ன்னின் வேகமும் பேட்டரி ஸ்டான்ட்-பை நேரமும் அதிகமாகுதுன்னு டெக்கிஸ் சைட் கிசுகிசு வேற ஓடிட்டு இருக்கு.

இந்த நேரத்தில் அமோசன் மைரோமேக்ஸ் கான்வாஸ் A1 (ஆன்ட்ராய்ட் ஒன்னுடன் ) கிட்டதட்ட 1200 ரூபாய் குறைச்சு ஆபர் போட்டிருக்காங்க...

5 எம்பி கேமரா - 2 எம்பி செகண்டரி கேமரா 1080p வீடியோ ரெக்கார்டிங். செல்பி எடுத்து பார்த்தேன், சூப்பரா இருக்கு...

அண்ட்ராய்ட் ஒன் (அதாவது ரெகுலர் அண்ட்ராய்ட்ல இருந்து பல தேவையில்லாத பிரச்சனைகளை நீக்கி ஸ்லிம்மா கொடுத்து இருக்கிற ஓ.எஸ்.). போன் / கேம்ஸ் எல்லாம் ரொம்ப வேகமா இருக்குது.

பேட்டரி சாலிடா ரெண்டு நாள் நிக்குது. (என்னோட யூசேஜ் பொறுத்து). ஆபீஸ் கொலீக் ஒருத்திக்கு 3 நாள் வருதுன்னு சொல்றாங்க (அவங்க அதிகமா யூசேஜ் இல்லை, அதனால இருக்கலாம். - அவங்களுக்கு கால் லேண்ட்லைன்ல தான் வரும்)

1 ஜிபி ராம் 4ஜிபி இன்பில்ட் மெமரி 32ஜிபி எக்ஸ்பாண்டபில். என்னுடைய கலெக்‌ஷன் மியூஸிக் சூப்பரா உட்கார்ந்துடுச்சு. (நம்ம கிட்ட ராஜா சாங்ஸ் தனி எஸ்.டி கார்டா இருக்கு, அதையும் மெயிண்டெயின் பண்ணுறம்ல). ஐபோனுக்கும் இதுக்கும் உள்ள ஒரே ப்ராப்ளம் ஐபோன்ல மெமரி கார்ட் போடமுடியாதுங்கறது தான் (ஆனா ஸ்பேஸ் அதிகம் இருக்கும்).

ஆர்டர் செய்வது பற்றி : சென்னை கோவை திருச்சி மதுரை மாதிரி கார்பரேஷன் சிட்டிகளில் இருந்து ஆர்டர் செய்தால் சில மணி நேரங்களில் வீட்டுக்கே வந்துவிடுகிறது. "கொஞ்சம் ரூரல்தாங்க என் வீட்டுக்கு வருமா ? ன்னு கேட்டா வரும் ஒரு நாள் கழிச்சு என்கின்றனர். ஒரு ப்ரெண்டு போன மாசம் ஆர்டர் செய்தபோது (மதுரையில் இருந்து) - ரெண்டு நாள் ஆச்சுன்னு சொன்னார். ஆனால் இப்ப ஒரே நாள்ல வருதுன்னு சொல்றாங்க..

கீழ உள்ள லிங்கில் கிளிக் பண்ணி பாருங்க, வாங்கினிங்கன்னா கமென்ட்ஸ்ல ரிவ்யூ எழுதுங்க

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger