Tuesday, 20 May 2014

நெல்லை அருகே பழ வியாபாரி வெட்டிக்கொலை Tirunelveli near one man murder

 

 

Feed: Tamil News
Posted on: Tuesday, May 20, 2014 8:55 PM
Author: Tamil News
Subject:
நெல்லை அருகே பழ வியாபாரி வெட்டிக்கொலை Tirunelveli near one man murder

 

Img நெல்லை அருகே பழ வியாபாரி வெட்டிக்கொலை Tirunelveli near one man murder

நெல்லை, மே. 20–

நெல்லையை அடுத்த கங்கைகொண்டானை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது35). பழ வியாபாரியான இவர் இன்று மதியம் தனது தாய் பத்மாவுடன் வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு கார் மின்னல் வேகத்தில் வந்து நின்றது. திடீரென அந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் பூல்பாண்டியனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதிர்ச்சியடைந்த பத்மா, மகன் மர்மக்கும்பலால் வெட்டப்படுவதை தடுக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் பத்மாவையும் சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பி விட்டனர்.

கை, கால், தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய்மகன் இருவரையும் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் பூல்பாண்டியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பத்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் கங்கைகொண்டான் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த வருடம் நெல்லை சந்திப்பில் மாரிசெல்வம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பூல்பாண்டியன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூல்பாண்டியன் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

எனவே மாரிசெல்வம் கொலைக்கு பழிக்குப்பழியாக பூல்பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

...

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger