Friday 30 May 2014

சேவாக்கின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணி 226 ரன் குவிப்பு Punjap scoring 226 run with Sehwag century

சேவாக்கின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணி 226 ரன் குவிப்பு Punjap scoring 226 run with Sehwag century

மும்பை, மே 30-

மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது தகுதி வெளியேற்ற சுற்றில் பஞ்சாப்-சென்னை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் வீரேந்தர் சேவாக் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் வோராவும் சென்னை பந்துவீச்சை அடித்து நொறுக்க, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி 110 ரன் எடுத்தபோது, வோரா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதேசமயம் அதிரடியை தொடர்ந்த சேவாக், ஐ.பி.எல். போட்டியில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். 50 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் இந்த இலக்கை அவர் எட்டினார். இதேபோல் இந்திய வீரர்களில் முரளி விஜயும் இரண்டு சதம் அடித்துள்ளார்.

3-வது விக்கெட்டுக்கு சேவாக்குடன் இணைந்த மில்லரும் சென்னை பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அணியின் ஸ்கோர் 211 ஆக இருந்தபோது சேவாக், நெஹ்ரா ஓவரில் விக்கெட்டை இழந்தார். அவர் 58 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சருடன் 122 ரன்கள் விளாசினார். அடுத்து களமிறங்கிய பெய்லியை ஒரு ரன்னில் வெளியேற்றினார் நெஹ்ரா. 38 ரன்கள் குவித்த மில்லர், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் விர்திமான் சகா (6) ஆட்டமிழந்தார்.

இதனால், 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.
...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger