Saturday, 28 December 2013

சன்னியாசி ஆனது ஏன்? நடிகை ரஞ்சிதா விளக்கம் Why are the saints Actress Ranjitha explain

Img சன்னியாசி ஆனது ஏன்? நடிகை ரஞ்சிதா விளக்கம் Why are the saints Actress Ranjitha explain

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன் டெலிவிஷனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நித்யானந்தாவின் மடாலயங்கள் தாக்கப்பட்டது. ரஞ்சிதா தலைமறைவானார். நித்யானந்தா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ரஞ்சிதாவும் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளிப்பட்டு ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல என்று அறிவித்தார். தன் மீது அவதூறு பரப்பி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் தற்போது சன்னியாசியாகியுள்ளார். நித்யானந்தாவின் 37-வது பிறந்தநாள் விழா பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்தது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் சன்னியாசியாக விரும்புகிறவர்களுக்கு நித்யானந்தா தீட்சை வழங்குவது உண்டு. இந்த பிறந்த நாளிலும் 40–க்கும் மேற்பட்ட பெண்கள் தீட்சை பெற்றனர். அதில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உரிய சடங்குகள் செய்து ரஞ்சிதா சன்னியாசியாக தீட்சை பெற்றார். படுக்கையறை ஆபாச வீடியோ சர்ச்சைக்கு பின்பும் நித்யானந்தா ஆசிரமத்திலேயே ரஞ்சிதா தங்கி இருந்தார். ஆன்மீக சுற்றுப் பயணங்களிலும் நித்யானந்தாவுடன் சென்றார். தியான கூட்டங்களிலும் பங்கேற்றார். தற்போது சன்னியாசியாகி உள்ளார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார்.

மேடையில் அவர் பேசும்போது உண்மை, அமைதி, அகிம்சை போன்றவற்றை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன். முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன் என்றார். ரஞ்சிதாவுக்கு நித்யானந்தா சன்னியாசி தீட்சதை வழங்கியதற்கு மடாதிபதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger