Img செல்போனில் டி.வி. பார்க்கும் புதிய சேவை: பி.எஸ்.என்.எல். வழங்குகிறது TV on cell phone the new service will see bsnl offers
சென்னை, டிச. 18–
செல்போனில் டி.வி. பார்க்கும் வசதியை பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம், தமிழ், ஆங்கிலம் உள்பட 104 டி.வி. சேனல்களை செல்போன் மூலம் பார்த்து ரசிக்கலாம். மாதம் ரூ.81, ரூ.165, ரூ.291 ஆகிய 3 வித கட்டணங்களில் இந்த வசதி கிடைக்கிறது.
மாதம் 81 ருபாய் கட்டணம் செலுத்தினால் 15 நாட்களுக்கு, '500 எம்.பி.' அளவில் 104 டி.வி. சேனல்களை பார்க்கலாம். இதில் தூர்தர்ஷன், என்.டி.டி.வி. உள்ளிட்ட சானல்கள் கிடைக்கும்.
165 ரூபாய் கட்டணத்தில் '1ஜிபி' அளவில் 50–க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களை 30 நாட்களுக்குப் பார்க்கலாம். இதில் தமிழ் டி.வி. சேனல்கள் மற்றும் கார்ட்டூன் உள்ளிட்ட சானல்கள் கிடைக்கும்.
மாதம் தோறும் 291 ரூபாய் கட்டணம் செலுத்தி '2ஜிபி' அளவுள்ள 30–க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களை 30 நாட்களுக்கு பார்க்கலாம். இதில் ஆங்கில செய்தி சானல்கள், விளையாட்டு சேனல்கள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.
பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு வட்டத்தில் (சர்க்கிள்) புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதம் (டிசம்பர்) 31–ந்தேதி வரை இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது. இதுபோல் ரூ.220 மற்றும் ரூ.550 மதிப்புள்ள 'டாப் அப்'களுக்கு 'புல் டாக்டைம்' வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 31–ந்தேதி வரை உண்டு.
பிரீபெய்டு முறையில் 'நேசம் கோல்டு' என்னும் திட்டப்படி ரூ.49 வவுச்சர் கட்டணத்தில் 180 நாட்கள் பேசலாம். சி.டி.ஏ. பிரிபெய்டு சேவை முறையிலும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?