School girl molested indian driver 6 year jail sentence australian court ruling
பள்ளி மாணவி கற்பழிப்பு: இந்திய டிரைவருக்கு 6 ஆண்டு ஜெயில் ஆஸ்திரேலியா கோர்ட்டு தீர்ப்பு
மெல்போர்ன், டிச.7-
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்தியாவை சேர்ந்த நிதின் ரானா (30) வாடகை கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந்தேதி நள்ளிரவில் ரெயில் நிலையம் அருகே 17 வயதுள்ள பள்ளிக்கூட மாணவி மதுபோதை மயக்கத்தில் நின்றார். இந்த மாணவி தனது நண்பர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்த போதை மயக்கத்தில் தள்ளாடிய மாணவியை வழிப்போக்கர்கள் சிலர் நிதின் ரானாவின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். காரில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மறுநாள் அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினாள்.
இதன்பேரில் நிதின் ரானா மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி வின்டே வில்மாத் விசாரித்து இந்திய டிரைவருக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் 4 ஆண்டு பரோலில் வெளியே விடக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?