Img பாராளுமன்ற தேர்தலில் முழு வீச்சில் பாடுபட்டால் வெற்றி உறுதி: நடிகை குஷ்பு பேச்சு Ensure the success of the parliamentary elections for the full range Actress Khushboo Talk
சேலம், டிச. 22–
தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சேலம் தாதகாப்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். குகை பகுதி செயலாளர் ச.சுப்பிரமணி வரவேற்றார். கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:–
ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி பட்டு வேட்டி, பட்டு சேலை, வெள்ளி குத்து விளக்கு, கூடவே பணத்தையும் கொடுத்து வெற்றியை பெற்றுள்ளனர். ஆனால் யாருடைய ஆதரவும் இன்றி சுமார் 64ஆயிரம் வாக்குகள் தி.மு.கவுக்கு கிடைத்தது என்றால் அது தான் உண்மையான வெற்றியாகும்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். பாரதீய ஜனதா சார்பில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராகவும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
இந்திய அரசியல் வரலாற்றில் வாஜ்பாய், வி.பி.சிங், குஜ்ரால் என அனைவரையும் பிரதமர் நாற்காலியில் அமர வைத்த பெருமை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உண்டு. இந்திய அரசியலில் கோபாலபுரம் வீட்டில் கதவை தட்டாத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம்.
இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று கட்சியின் பொதுக்குழுவில் தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறி உள்ளார். இருப்பினும் தனித்து போட்டியிடக்கூடிய தைரியம் தி.மு.கவுக்கு உண்டு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிகாட்டுபவரே பிரதமராக முடியும்.
தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடு படக்கூடிய ஒரே தலைவர் நமது தலைவர் கலைஞர் தான். 90 வயதிலும் 16 வயது போல் அவருக்கு மூளை வேலை செய்வதை நம்மால் உணர முடிகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.கவினர் முழுவீச்சில் பாடுபட்டால் வெற்றி உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி ராஜா, மாநகர செயலாளர் எஸ்.டி.கலையமுதன் உள்பட பலர் பேசினர்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?