Img பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஐதராபாத் வாலிபர்: இந்தியா வர பயந்து இங்கிலாந்திடம் தஞ்சம் கேட்கிறார் Indian transgender seeks assylum in UK claiming abuse in india
லண்டன், டிச.1
குரோமசோம் மற்றும் ஹார்மோன்களின் கிளர்ச்சியால் தன்னை ஆணாக மாற்றிக் கொண்ட ஒருவர் இந்திய சமூகம் தன்னை கொடுமைப் படுத்துவதாக குற்றம்சாட்டி இங்கிலாந்து நாட்டிடம் தஞ்சம் கேட்டு அங்கு காத்திருக்கிறார்.
ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பள்ளி காலத்தை முடித்து பருவ வயதை எட்டியபோது தனது உடலுக்கும் மனதுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அந்த பெண்ணால் உணர முடிந்தது.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அரசு துறையில் நல்ல வேலையும் கிடைத்தது. ஐதராபாத்தில் தன்னுடன் பணி புரிந்த வேறொரு பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.
நட்பு முற்றி ஃபயர் ஆக மாறிய பின்னர் தனது உள்ளக் குமுறல்களை அந்த பெண் தனது தோழியிடம் கொட்டி தீர்த்தார்.
குடும்பத்தை விட்டு வெளியேறி பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் முழு ஆண்மகனாக மாறி, தனது பெயரையும் சமீர் நீலம் என்று மாற்றிக் கொண்டு தோழியின் வீட்டிலேயே கணவன்-மனைவி போல் வாழ்க்கையை தொடங்கினார்.
இந்த ஃபயர் கதை மெல்ல அக்கம்பக்கத்தில் பரவத் தொடங்கியது. அதுவே ஊடகங்களின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு பெருந்தீயாக மாறி விட்டது.
சமூகத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளான சமீர் நீலம், நான் நானாகவே இருப்பேன், அதுவும்..ஆணாகவே இருப்பேன் என்று சபதம் எடுத்துக் கொண்டார்.
இந்திய சமூகம் தன்னை புறக்கணிப்பதால், வேறு எந்த நாட்டுக்காவது போய் தோழியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான தேடலில் ஈடுபட்டார்.
பாலியல் பேதங்களுக்காக சொந்த நாட்டில் புறக்கணிக்கப்படும் பாலினம் மாறிய மக்களுக்கு இங்கிலாந்தில் தாராளமாக வசிக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிந்த சமீர் நீலம், தற்போது வடக்கு இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்டில் வாழ அனுமதி கேட்டு தஞ்சம் அடைந்துள்ளார்.
இங்கே இருக்கும் போது நான் ஒரு ஆணாக மதிக்கப்படுகிறேன். இந்தியாவுக்கு போனால் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.
என்னை ஒதுக்கி வைத்து கொடுமைப் படுத்துவார்கள். ஏன்..? ஒழித்து கூட விடுவார்கள் என்று சமீர் நீலம் கூறுகிறார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?