Sunday, 10 November 2013

இலங்கையில் தமிழ் ஈழம் அமைய அனைவரும் பாடுபட வேண்டும்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு bharathiraja speech in Tanjore mullivaikkal festival

இலங்கையில் தமிழ் ஈழம் அமைய அனைவரும் பாடுபட வேண்டும்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு bharathiraja speech in Tanjore mullivaikkal festival

தஞ்சாவூர், நவ.11–

தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் அமைக்கப்பட்டு உள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இரவு திரைத்துறை அரங்கம் நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமை வகித்து பேசியதாவது:

இங்கு அமைக்கப்பட்டு உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை பார்த்தது முதல் என் இதயம் கனத்த இதயமாக உள்ளது.

கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் நம் இன மக்கள் கொலை செய்யப்பட்ட போது நம்மால் எதுவும் செய்ய முடியாமல் வேதனைப்பட்டோம்.

திரைப்படத் துறையினராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தமிழ் மக்கள் உணர்ச்சி அற்றவர்களாக மாறி வருகிறோம்.

தமிழகத்தில் தற்போது 40 விழுக்காடு மட்டும் தான் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை பார்க்கும் போது ஒவ்வொரு தமிழனுக்கும் கோபம் வரவேண்டும்.

சிங்கள வெறியர்களை எதிர்த்து அங்கு தமிழ் ஈழம் அமைய அனைவரும் பாடுபடவேண்டும். அந்த உணர்வு அனைவருக்கும் வரவேண்டும்.

இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாருமே கலந்து கொள்ள கூடாது. இதனை நாம் சொன்னால் இந்த பிரச்சினை தனிப்பட்ட ஒரு மாநிலத்தின் பிரச்சினை என்று சொல்கிறார்கள்.

இது பற்றி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று கூறுகின்றனர். அப்போது நாம் இந்தியாவில் இல்லையா, இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டு விட்டதா. ஏன் தமிழ்நாட்டை மத்திய அரசு ஒதுக்குகிறது.

இதற்கு எங்களை இந்தியாவில் இருந்தே ஒதுக்கி விடலாம்.

தமிழ் மொழி, தமிழன் காப்பாற்றப்பட வேண்டும். இதற்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். அப்போது தான் தனித் தமிழ் ஈழம் மலருவதை நாம் வென்று எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசியதாவது:

பெரியகோவிலை பார்க்கும் போது தமிழனின் வெற்றி அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. முள்ளிவாய்க்காலை பார்க்கும் போது தமிழ் இனத்தின் அழிவு தெரிகிறது.

தமிழ் இனம் அடிமையாக இருக்க கூடாது. அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் போராட வேண்டும். இந்த முள்ளிவாய்க்காலில் இடம் பெற்று உள்ள தலைவர்களின் படமும், சிலைகளும் சாதி, மதம் அடிப்படையில் அமைக்கப்பட வில்லை.

தமிழன் தமிழ் இனம் என்ற அடிப்படையில் தான் அமைக்கப்பட்டு உள்ளது. ஈழ மக்களுக்காக தமிழ் திரைப்படத் துறையினர் நிறைய காரியங்களை செய்து வருகின்றனர். தமிழ் மக்கள் அனைவரும் சாதி மதங்களை கடந்து, மறந்து ஒரே இனமாக ஒன்றுப்பட்டு போராடினால் தான் தனித் தமிழ் ஈழம் அமையும்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் பிரிந்து இருப்பதால் தான் இது போன்ற துயர சம்பவங்கள் நடக்கிறது.

தமிழ் இனத்திற்காக தமிழனாகிய நாம் பாடுபடுவோம். அப்போது தான் வெற்றி கிடைக்கும். இலங்கையில் தமிழ் இனம் அழிந்து வருகிறது.

இலங்கையில் தமிழ் ஈழம் உருவாக வேண்டும் என்றால் தமிழகத்தில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இயக்குனர்கள் மு. களஞ்சியம், வெ. சேகர், புகழேந்தி தங்கராசு, நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக கவிஞர் காசி ஆனந்தன் இயற்றி தமிழ் இசை வேங்கை மகராசன் பாடிய முள்ளிவாய்க்கால் மண்ணே என்ற தலைப்பிலான சி.டி.யை பழ. நெடுமாறன் வெளியிட்டார். அதனை இயக்குனர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். இதையடுத்து பொது அரங்கம் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger