நாட்டை விற்பதைக் காட்டிலும் டீ விற்பது மேல்: சமாஜ்வாடி தலைவருக்கு மோடி பதில் Better to be tea seller than sell out the nation Modi
ராய்கர், நவ. 15-
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பீகார் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஏழை குடும்பத்தில் பிறந்த நான், ரெயில்வே நிலையம் மற்றும் ஓடும் ரெயிலிலும் டீ விற்று இருக்கிறேன் என்று கூறினார். இதற்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர், ஒரு கான்ஸ்டபிள் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது, டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று சாடியிருந்தார்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர்-பீமதார பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
டீ விற்றவரை நாட்டின் பிரதமராக கொண்டு வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டை விற்பதை காட்டிலும் டீ விற்பதே சிறந்தது.
மோடி என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்க்க ராகுல் டிவி பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நம்பர் 2 ஆன ராகுல், நாட்டை வழிநடத்தி செல்வது குறித்து கவனம் செலுத்துவதற்கு நேரம் ஒதுக்காமல் என்னைப் பற்றி கவனிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.
சோனியா, பின் தங்கியவர்களின் மேற்பாட்டிற்கான முறையான கொள்கைகளை பின்பற்ற தவறி வருகிறார். நாட்டின் நலனுக்காக இந்த நடைமுறைகளை யார் கொண்டு வந்தது? உங்களுடைய கணவரா? அல்லது உங்களது மாமியாரா?.
சத்தீஸ்கரில் நாங்கள் மூன்றாவது முறையாக நிச்சயம் ஆட்சியை பிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?