Saturday, 23 November 2013

மணலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை Manali same family 4 people suicide

Imgதிருவொற்றியூர், நவ.24- சென்னையை அடுத்த மணலி பலராமன் தெருவில் வசித்து வருபவர் ஜெயராமன் (வயது 40). இடியாப்ப வியாபாரி. இவரது மனைவி லெட்சுமி (35). இவர்களுக்கு சங்கீதா (14), சரண்யா (12), சபீதா (9) என 3 மகள்கள் இருந்தனர். இதில் சங்கீதா அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பும், சரண்யா 6-ம் வகுப்பும், சபீதா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஜெயராமன் கீழ் வீட்டிலும், அவரது தாயார் வள்ளியம்மாள் மாடியிலும் வசித்து வருகிறார்கள். மருமகள் லெட்சுமிக்கும், மாமியார் வள்ளியம்மாளுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக எண்ணூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருவர் மீதும் வழக்கு உள்ளது. அவர்கள் பேசி சமரசம் செய்து வைத்தனர். இந்தநிலையில் நேற்று ஜெயராமன், வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். இரவு 8 மணிக்கு அவர் வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, லெட்சுமியும் அவரது 3 மகள்களும் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்று பார்த்தபோது, 3 மகள்களும் இறந்து கிடந்தனர். லெட்சுமி மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மணலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஜெயராமனையும், மாமியார் வள்ளியம்மாளையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ... 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger