வழிப்போக்கர்களுக்கு கட்டிப்புடி வைத்தியம் : சவுதியில் 2 வாலிபர்கள் கைது 2 saudi youth arrested for free hug campaign
ரியார், நவ. 23-
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் மனச்சோர்வு ஏற்பட்ட நபர்களுக்கு கட்டிப்புடி வைத்தியத்தின் மூலம் புது தெம்பை கமல்ஹாசன் ஏற்படுத்துவார்.
இதுபோல், முன்பின் அறிமுகமற்ற புதிய நபர்களை கட்டியணைத்து அவர்களுக்க வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கென்றே ஃப்ரீ ஹக்ஸ் எனப்படும் கட்டிப்புடி இயக்கம் ஒன்று உதயாகியுள்ளது.
இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தற்போது உலகம் முழுவம் பரவி வருகின்றனர். முக்கிய நகரங்களில் புதிய நபர்களை பார்க்கும்போது அவர்களின் அருகே சென்று மார்போடு ஆரத்தழுவி வாழ்த்துவது இவர்களின் வாடிக்கை.
இஸ்லாமிய மத சம்பிரதாயங்களுக்கும், பழமைவாதத்துக்கும் பெயர் போன சவூதி அரேபியாவை சேர்ந்த சிலரும் இந்த கட்டிப்புடி இயக்கத்தில் உறுப்பினர்களாகியுள்ளனர்.
இவர்களில் 2 வாலிபர்கள் ரியாத் நகரில் உள்ள தஹிலா தெருவில் ஃப்ரீ ஹக்ஸ் பேனர்களுடன் நின்றபடி அவ்வழியே சென்றவர்களுக்கு எல்லாம் இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் செய்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த செய்தி சவூதி மக்களிடையே தற்போது கருத்து போராட்டத்துக்கு வழி வகுத்துள்ளது. அவர்கள் இலவச அணைப்பு மட்டும் தானே கொடுத்தார்கள்? போதை பொருளையா இலவசமாக தந்தார்கள்? என்று ஒருபுறம் ஆதரவு குரல் எழுந்துள்ளது.
இன்றைக்கு கட்டிப்பிடிப்பர்கள் நாளை முத்தம் தருவார்கள். அடுத்த நாள் இலவசமாக உடலுறவுக்கு அழைப்பார்கள். இதற்கு எல்லாம் இடம் தரக்கூடாது என மற்றொரு புறம் எதிப்பு குரலும் கிளம்பியுள்ளது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?