தாஜ்மகாலில் செருப்பு விளம்பர படப்பிடிப்பு: உலக அழகி மீது வழக்கு Taj Mahal shoes ad shoot Miss World on the case
Tamil News
ஆக்ரா, அக்.11–
உலக அழகி ஒலிவியா கல்போ. 10 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வைத்து பிரபல செருப்பு தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
நேற்று உலக அழகி ஒலிவியாவை வைத்து தாஜ்மகாலில் படப்பிடிப்பு நடத்தியது. ஒலிவியா விதவிதமான மாடல்களில் செருப்புகளை அணிந்து இருந்தார்.
தாஜ்மகாலில் உள்ள 'டயானசீட்' என்ற இடத்தில் அமர்ந்து போஸ் கொடுத்தார். இது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா நினைவாக சலவைக்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது.
1992–ல் டயானா ஆக்ரா வந்து தாஜ்மகாலை பார்வையிட்டதன் நினைவாக 'டயானா சீட்' உருவாக்கப்பட்டது. இங்குதான் டயானா அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.
தாஜ்மகாலின் உள்ளே எந்த படப்பிடிப்பும் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தடையை மீறி உலக அழகியை வைத்து படப்பிடிப்பு நடத்தியது பற்றி தாஜ்மகால் நினைவுச்சின்ன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உலக அழகி ஒலிவியா கல்போ மீது ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் என்.கே.பதக் தெரிவித்தார்.
தாஜ்மகாலை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் செருப்பு அணிந்து செல்லக்கூடாது. புல்வெளி மற்றும் தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு அணிந்து செல்லலாம். இந்த தோட்டத்தின் மத்தியில்தான் 'டயானா சீட்' உள்ளது. உலக அழகி ஒலிவியா டயானா சீட்டில் சந்தனத்தை பை நிறைய எடுத்துச் சென்று ஒய்யாரமாக அமர்ந்து போஸ் கொடுத்தார்.
செருப்பு மற்றும் சந்தன பையை அனுமதியின்றி எடுத்துச் சென்றதாகவும் நினைவுச் சின்னத்தின் மீது அமர்ந்ததாகவும் உலக அழகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?