Monday, 2 September 2013

மனநலம் பாதித்த பெண் கற்பழிப்பு - வார்ட் பாய் காவலர் கைது ward boy arrested for molesting mentally challenged woman

மனநலம் பாதித்த பெண் கற்பழிப்பு: வார்ட் பாய் காவலர் கைது ward boy arrested for molesting mentally challenged woman 

 

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள போசாரி பகுதியில் உள்ள காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை அனுமதித்து பராமரித்து வருகின்றனர்.

இங்கு தங்கியுள்ள 30 வயது பெண் நோயாளிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காப்பக நிர்வாகிகள் அவரை அருகில் உள்ள அரசு நகராட்சி ஆஸ்பத்திரியில் கடந்த 26ம் தேதி அனுமதித்தனர்.

அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணை 29ம் தேதியன்று வேறு வார்டுக்கு மாற்ற வேண்டும் என்று கூறி வார்டு பாய் ஒருவர் அழைத்துச் சென்றார். அந்த ஆஸ்பத்திரியின் காவலாளியின் துணையுடன் அந்த பெண்ணை லிப்ட் டில் ஏற்றிய வார்டு பாய் இரண்டு மாடிகளுக்கு இடைப்பட்ட வெளியில் லிப்ட் டை நிறுத்திவிட்டு உடனிருந்த காவலாளியுடன் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்து விட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் வாய் பேசவும் முடியாதவர் என்ற குறைபாட்டை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட வார்ட் பாயும், காவலரும் எதுவும் நடக்காதது போல் அந்த பெண்ணை மீண்டும் பழைய வார்ட்டுக்கே கொண்டு வந்து போட்டனர்.

கடந்த 31ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அந்த பெண், ஆஸ்பத்திரியில் தனக்கு நேர்ந்த கொடுமையை காப்பக நிர்வாகிகளிடம் சைகை மொழியில் கூறினார். இதனையடுத்து, காப்பக நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விரைந்து சென்று வார்டு பாயையும், காவலரையும் கைது செய்தனர். 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger