திருவள்ளூரில் நள்ளிரவில் மனைவி கண்முன் கணவர் அடித்து கொலை midnight wife before husband murder near Tiruvallur
Tamil NewsToday, 05:30
திருவள்ளூர், செப். 25–
திருவள்ளூர் ரெயில்வே பாலம் அருகே கூடாரம் அமைத்து தங்கி இருந்தவர் சந்துரு (60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி. இவர்களுக்கு விஜய் என்ற மகன் உள்ளான்.
சந்துருவுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று இரவு மது போதையில் கூடாரத்தின் வெளியே தூங்கினார்.
நள்ளிரவு 1 மணி அளவில் அவ்வழியே வந்த 5 பேர் கும்பல் சந்துருவை எழுப்பி 'சிகரெட்' பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டனர். அவர்களை சந்துரு திட்டினார்.
இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கும்பல் சந்துருவை கட்டையால் தாக்கினர். அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த சாவித்திரி அவர்களை தடுக்க முயன்றார்.
அவரையும் கீழே தள்ளிவிட்டு சந்துருவை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டனர்.
உடனடியாக சந்துருவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சந்துரு தங்கி இருந்த இடம் அருகே சினிமா தியேட்டர் உள்ளது. இரவு காட்சி பார்த்து சென்றவர்கள் அவரை எழுப்பிய போது ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக இரவில் தியேட்டருக்கு வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மனைவி கண்முன் கணவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?