தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பவானி சிங் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
>
> இது இந்த வழக்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடந்த மாதம் நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்தது.
>
> இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பவானி சிங் நீக்கம் தொடர்பாக கர்நாடக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். வழக்கின் விசாரணை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
>
> அதன்படி இன்று மீண்டும் விசாரணக்கு வந்தபோது, கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். அப்போது பவானி சிங்கை நீக்கி பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு திரும்ப பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
>
> இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய வழக்கறிரை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தனர். கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து வழக்கிறிஞரை நியமித்துக்கொள்ள வேணடும் என உத்தரவிட்டனர்.
>
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?