நடிகை ரஞ்சிதா வீடியோ ஒளிபரப்பு வழக்கு: 7 நாட்களுக்கு தொடர்ந்து வருத்தம் தெரிவிக்க கோர்ட்டு உத்தரவு actress rajitha fake video broadcast case 7 days after court to repent
நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் ‘‘நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார்.அதில் தன்னையும், நித்தியானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள், போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார். இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
வீடியோவை ஒளிபரப்பிய டி.வி.செய்தி சேனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் டி.வி.என்பதால் இது பற்றி டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழு விசாரணை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு உத்தர விட்டது. நீதிபதி ஏ.பி.ஷா (ஓய்வு) தலைமையிலான இந்தக்குழு விசாரணை நடத்தியது. நேற்று முன்தினம் அந்த வழக்கில் அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அந்த வீடியோ காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் மனுதாரரின் மதிப்பையும், மரியாதையும் கெடுப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இது ஒளிபரப்பு உரிமையை மீறும் செயலாகும்.
தனிப்பட்ட நபரின் உரிமையை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் டி.வி. வருகிற 9–ந் தேதி முதல் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுத்துக்கள் மூலம் ஆங்கிலத்திலும், தமிழிலும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு வருத்தத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?