Friday, 2 August 2013

நடிகர் பரத்தும், நடிகை ஷம்முவும்

நடிகர் பரத்தும், நடிகை ஷம்முவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரகாஷ்ராஜ் தயாரித்து, நடித்த ‘காஞ்சிவரம்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷ்மமு. அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
பரத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

பரத்துடன் நடித்தபோது இவர்களிடைய காதல் தொற்றிக் கொண்டதாம். பின்னர், ஷம்முவுக்கு படவாய்ப்பு இல்லாமல் போகவே, அமெரிக்காவுக்கு பறந்து போனார். இருந்தாலும் இவர்களிடையே இருந்த காதல் குறையவில்லையாம்.

 இருவரும் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில், பரத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும், மணப்பெண் ஷம்முவாகத்தான் இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது.

அதாவது, பரத்தின் நண்பர்கள் ஷம்முவை அண்ணி, என்றுதான் அழைப்பார்களாம். ஆனால் பரத் தரப்பு இந்த செய்தியை மறுத்துள்ளதுடன், ஒரு நடிகையை எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறுகிறார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger