Friday, 23 August 2013

16 வயது சிறுமியை கற்பழித்த மந்திரவாதி தலைமறைவு police search to nab gujarat godman for molesting minor girl

பேய் ஓட்டுவதாக கூறி 16 வயது சிறுமியை கற்பழித்த மந்திரவாதி தலைமறைவு police search to nab gujarat godman for molesting minor girl 

 

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பம் நீண்ட காலமாக சொத்துப் பிரச்சினை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக சிக்கலில் மாட்டித் தவித்தது.

அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த ஹரி பிரம்மன் என்ற மந்திரவாதி அடிக்கடி அவர்களின் வீட்டுக்கு வந்து மந்திர தந்திரங்களை செய்து வந்தான்.

நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அவசரமாக ஓடிவந்து கதவை தட்டிய மந்திரவாதி, ‘நல்ல நேரம் முடிவதற்குள் உடனடியாக பூஜை செய்ய வேண்டும்’ என கூறி உள்அறைக்கு சென்றான்.

‘உங்களது பீடை ஒழிய உங்கள் இளைய மகளை தனியாக வைத்து பூஜிக்க வேண்டும். அவளிடம்தான் தெய்வீக சக்திகள் குடிகொண்டு இருக்கின்றன’ என்று கூறிய ஹரி பிரம்மன் அவர்களின் 16 வயது மகளை தனிஅறைக்கு அழைத்துச் சென்றான். பெற்றோர்களை அறையை விட்டு வெளியேறும்படி கூறிய அவன், கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு அந்த சிறுமியை கதறக்கதற கற்பழித்தான்.

எல்லாம் முடிந்த பிறகு அந்த பெண் மயங்கி விழுந்தாள். ஒன்றும் நடக்காததுபோல் வெளியே வந்த மந்திரவாதி, ‘உங்கள் மகள் மீது தெய்வத்தின் அருள் வந்து அவள் மயங்கி விழுந்து விட்டாள். சிறுதி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும். எனக்கு இன்னொரு வீட்டில் அவசரப் பூஜை இருக்கிறது’ என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து நழுவினான்.

மயக்கம் தெளிந்த சிறுமி பெற்றோரிடம் உள்ளே நடந்த அக்கிரமத்தை கூறி அழுதாள். இதனையடுத்து அவர்கள் டியோடர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் சர்தார் புரா பகுதியை சேர்ந்த போலி மந்திரவாதி ஹரி பிரம்மனை வலை வீசி தேடிவருகினறனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger