ஐ.பி.எல்-6 வது போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீநாத், அஜித் சாண்டிலா, அன்கித்
சவான் ஆகியோர் கடந்த மே மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பல சூதாட்ட புரோக்கர்களும் கைது
செய்யப்பட்டுள்ளனர். டெல்லி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ்
அணியின் கேப்டன் ராகுல் டிராவிடிடம் விசாரணை நடத்த, போலீஸ் அதிகாரிகள் குழு கடந்த 10-ம் தேதி பெங்களூர் சென்றது. அவர்கள் டிராவிட்டின் வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலம் சூதாட்ட வழக்கிற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் ராகுல் டிராவிட் அரசுத் தரப்பு சாட்சியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பட்டி உப்டோ தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ளார். அவர் இந்தியா திரும்பியதும் அவரும் அரசு தரப்பு சாட்சியாக சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவர் கூட்டாளி சோட்டா சகில் உள்பட பலரின் பெயர் இடம் பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?