Saturday, 6 July 2013

இளவரசனின் மரணச் செய்தி திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார்

இளவரசனின் மரணச் செய்தி அறிந்ததும் திவ்யா அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
திவ்யாவின் தாய் தேன்மொழி கூறியதாவது:–
எனது மகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியால் உடைந்து போய் இருக்கிறாள். எதுவும் சாப்பிட மறுக்கிறாள். முதலில் தந்தையை இழந்தாள். இப்போது இளவரசனின் சாவு செய்தியும் அவளை மிகுந்த மனஅழுத்தத்தில் தள்ளி உள்ளது. அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நாங்களும் தவிக்கிறோம்.

இளவரசன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை.
என் மகளை இந்த சோகத்தில் இருந்து மீட்க வேண்டும். அதற்காக முயற்சித்து வருகிறேன்.
இவ்வாறு தேன்மொழி கூறினார்.
இதற்கிடையில் இளவரசனின் பெற்றோர் இளங்கோ–கிருஷ்ணவேணி ஆகியோர் தர்மபுரி மாவட்ட கலெக்டர் லில்லியிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்கள்.
அந்த மனுவில் எனது மகன் சாவுக்கு பா.ம.க. தலைவர்கள், திவ்யாவின் தாய் தேன்மொழி மற்றும் 12 பேர் தான் பொறுப்பு. மேலும் என் மகன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger