Wednesday, 3 July 2013

மற்ற வாலிபர்களுடன் பேசுவது எனக்கு பிடிக்க வில்லை , பண்ணை வீட்டில் இளம் பெண்ணை கொன்ற காதலன்

 மற்ற வாலிபர்களுடன் பேசுவது எனக்கு பிடிக்க வில்லை 


கேளம்பாக்கத்தை அடுத்த வெளிச்சை கிராமத்தில் சென்னை தியாகராய நகரை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு ஏராளமான மரம், செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பண்ணை வீட்டின் காவலுக்காக 15 நாய்கள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றது.

இந்த பண்ணை வீட்டில் ராமையா என்பவர் தங்கி இருந்து தோட்டப் பணிகளையும் கவனித்துக் கொண்டு அருகில் உள்ள நாவலூர் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் போச்சம் பள்ளியை சேர்ந்த இவர், தனக்கு துணையாக மகள் செல்வநாயகியையும் தன்னுடனேயே தங்க வைத்திருந்தார்.


செல்வநாயகியும் தோட்ட வேலைகளை செய்து கொண்டு அங்கு வளர்க்கப்படும் நாய்களையும் பராமரித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாய்களுக்கு உணவு வைப்பதற்காக சென்ற செல்வநாயகி நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் பண்ணை தோட்டத்தின் உரிமையாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி சுகுணா டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு செல்வநாயகியை தேடிச் சென்றார். அப்போது பண்ணை வீட்டின் பின்புறம் செல்வ நாயகி கொடூரமான முறையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் திரண்டு வந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று செல்வநாயகியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் பற்றி துப்பு துலக்குவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் செல்வநாயகியின் கொலை குறித்து துப்பு துலக்கினர்.

பிரமாண்டமான பண்ணை தோட்டத்தினுள் அவ்வளவு எளிதாக வெளியாட்கள் யாரும் நுழைந்து விட முடியாது என்பதால், செல்வநாயகியை கொன்றவர்கள் தோட்டத்தில் பணிபுரிபவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து அங்கு பணிபுரியும் 20 வேலைக்காரர்களின் பெயர் பட்டியலை சேகரித்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தோட்டத்தில் பிளம்பராக பணியாற்றி வந்த கண்ணன் (வயது 32). செல்வநாயகியை காதலித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசாரின் சந்தேகப்பார்வை கண்ணன் மீது திரும்பியது. பண்ணை தோட்டத்துக்கு அருகில் உள்ள ஏரி எதிர்வாயல் கிராமத்தை சேர்ந்த இவரது தாயும் தோட்டத்தில் பணியாற்றி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

செல்வநாயகி கொலை செய்யப்பட்ட அன்று கண்ணன் எந்தெந்த பகுதிகளில் சுற்றி திரிந்தார் என்பது பற்றி அவரது செல்போனை வைத்து துப்பு துலக்கினர். அப்போது இரவு 8 மணி அளவில் கண்ணன் பண்ணை வீட்டுக்குள் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது செல்வநாயகியை கொலை செய்ததை கண்ணன் ஒப்புக் கொண்டார். காதல் தகராறில் அவர் இக்கொலையை செய்தது தெரிய வந்தது. இதுபற்றி கண்ணன் போலீசில் அளித்த பரபரப்பு வாக்கு மூலம் வருமாறு:-

செல்வ நாயகியை நான் உயிருக்கு உயிராக காதலித்தேன். அவளுக்கு அடிக்கடி செலவுக்கு பணம் கொடுத்தேன். நிறைய பொருட்களையும் வாங்கி கொடுத்தேன். செல்வநாயகி மற்ற வாலிபர்களுடன், பேசுவது எனக்கு பிடிக்க வில்லை இதுபற்றி அவளிடம் நான் கேட்டேன். இப்போது திருமணத்துக்கு முன்னரே என்னை கட்டுப்படுத்த நினைக்காதே என்று கூறி என்னிடம் சண்டை போட்டாள். உனது பேச்சை கேட்க முடியாது என்றும் கூறினாள்.

இதையடுத்து செல்வ நாயகியை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். எனது பேச்சை கேட்காமல் என்னையும் அவதூறாக பேசிய அவளை கொலை செய்வதற்காக தோட்டத்தில் முன் கூட்டியே நான் பதுங்கி இருந்தேன். நாய்களுக்கு உணவு போடுவதற்காக நைட்டியுடன் செல்வநாயகி வந்தார். அப்போது அவளை கீழே தள்ளி தோளில் கிடந்த துண்டை எடுத்து கழுத்தை இறுக்கி கொன்றேன்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger