தர்மபுரி காதல் ஜோடியான இளவரசன்–திவ்யா விவகாரத்தில் திவ்யாவுக்கு
ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகி வருபவர் வக்கீல் பாலு. பா.ம.க.வை சேர்ந்த இவர்
அக்கட்சியின் சமூக நிதி பேரவை தலைவராகவும் இருக்கிறார். காடு
வெட்டிகுரு மீதான வழக்கு உள்ளிட்ட பா.ம.க. தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆஜராகி வருகிறார். அண்ணா நகர் டி.பிளாக்கில் ஈஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இவர் வசித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு தனது வீட்டு அருகில் ‘மாருதி ஸ்விப்ட்’ காரை நிறுத்தி இருந்தார். இன்று காலை எழுந்து பார்த்த போது காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.
பெரிய கல்லை எடுத்து கண்ணாடி மீது அருகில் நின்று போட்டது போல காணப்பட்டது. இதில் கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியுள்ளது.
இதுபற்றி வக்கீல் பாலு அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். அதில் வேண்டுமென்றே எனது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திவ்யாவுக்கு ஆதரவாக பாலு வாதாடுவது பிடிக்காமல் தான் மர்ம ஆசாமிகள் சிலர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு நேரத்தில்தான் விஷமிகள் கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். எனவே அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்தவர்கள் யார்? யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வந்ததாக பாலு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–
திவ்யா வழக்கில் ஆஜரான பின்னர் உஷாராக இருக்கு மாறு நண்பர்கள் சிலர் என்னிடம் கூறிவந்தனர். சில அச்சுறுத்தல்களும் இருந்து வந்தன. கார் கண்ணாடியை உடைத்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. போலீசார் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பாலு கூறினார்.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?