Friday, 5 July 2013

வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய
நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட்
போட்டி, வெஸ்ட் இண்டீசில்
நடைபெற்று வருகிறது. 4-வது போட்டியில்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள்
நேற்று மோதின. டாஸ் வென்ற வெஸ்ட்
இண்டீஸ் அணி முதலில்
பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்தியா முதலில் பேட் செய்த
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்
இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. இந்திய
அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 102
ரன்கள் குவித்தார்.

இதை அடுத்து 312 ரன்கள் எடுத்தால்
வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ்
அணி ஆடியது. பின்னர் 10 ஓவரில் 2 விக்கெட்
இழப்புக்கு 56 ரன்கள் எடுத்திருந்த
போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம்
மழையால்  பாதிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் முறைப்படி
274 ரன்கள் 39 ஓவர்கள் என மாற்றப்பட்டது
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் மள மள வென சரிந்தன 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஆட்ட நாயகன் விருது விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது

1 comments:

  1. மானத்த காப்பாத்தினாங்க

    ReplyDelete

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger