அசாம் தேஜ்பூர் பகுதியில் ஆடையில்லா மனிதர்கள் பெண்களை கற்பழிக்கும்
நோக்கில் அலைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த வதந்தி பக்கத்து
மாவட்டங்களுக்கும் பரவத்தொடங்கியது. இதனால் கிராம மக்கள் தங்களது பெண்களை
காப்பாற்ற பயங்கர ஆயுதங்களுடன் இரவில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சோனித்பூர் மாவட்டம் பலிஷிஹா கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், பயங்கர ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு நேற்று இரவு முழுவதும் கண்காணித்து வந்தனர். அப்போது அதிகாலையில் 3 பேர் ஒரு வாகனத்தில் வந்துள்ளனர். உடனே அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்ததால், பெண்களை கெடுக்க வந்த ஆடையில்லா மனிதர்கள் என நினைத்து கையில் இருந்த ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகுதான், கொலை செய்யப்பட்ட மூவரும், கார்கள் மற்றும் காரிலிருந்து எண்ணெய் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. எனவே, வதந்திகளை நம்பவேண்டாமென பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?