
பொதுவாக விஜய் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் பட சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்று ரிலீஸாகும். அந்தவகையில் இன்று(ஜூன் 22ம் தேதி) நடிகர் விஜய்க்கு 38வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளுக்கு தனது பிறந்தநாள் பரிசாக நேற்று(ஜூன் 21ம் தேதி) தனது தலைவா படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை வெளியிட்டுள்ளார் விஜய். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். தலைவா பட பாட்டும், டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இதற்கிடையே தனது 38வது பிறந்தநாளை எந்த ஆடம்பரமும் இல்லாமல் ரொம்ப எளிமையாக தனது வீட்டில் கொண்டாடினார் விஜய். பின்னர் ஜில்லா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கிளம்பிய விஜய் அங்கு படக்குழுவுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். ஜில்லா படக்குழு விஜய்க்கு பிரத்யேக கேக் வரவழைத்து இருந்தனர். பின்னர் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் விஜய், அதை அவரே பரிமாறினார். ஷூட்டிங் முடித்த கையோடு நேராக வீட்டுக்கு கிளம்பினார். இந்த பிறந்தநாளை தனது குடும்பத்துடன் மட்டுமே விஜய் செலவழிக்க முடிவெடுத்துள்ளார். மாலையில் மட்டும் சிலரை சந்திக்கும் விஜய் மற்றபடி தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்கிறார். அதேசமயம் அவரது ரசிகர்கள் சார்பில் பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!
வாழ்த்துக்கள்
ReplyDelete