Saturday, 29 June 2013

தன் குடும்பத்தினர் பதவியில் இருக்க கருணாநிதி எதுவும் செய்ய தயார்

இலங்கை தமிழர்கள்
பிரச்னையை மையப்படுத்தி, காங்கிரஸ்
கூட்டணியிலிருந்து வெளியேறிய தி.மு.க.,
ராஜ்யசபா எம்.பி.,யாக,
கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
என்பதற்காக, மீண்டும் காங்கிரசுடன்
கூட்டணியை புதுப்பித்துக் கொண்டது,
இலங்கை தமிழர்கள் மத்தியில் கடும்
அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பின், 31 எம்.எல்.ஏ.,க்களின்
ஓட்டுக்களை பெற்ற தி.மு.க., வேட்பாளர்
கனிமொழி, மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,
பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியிடம்

ஆதரவு கேட்பதற்கு முன், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட், - தே.மு.தி.க., - பா.ம.க., ஆகிய
மூன்று கட்சிகளின் ஆதரவை தி.மு.க.,
கேட்டது. ஆனால், இந்த மூன்று கட்சிகளும்
தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்
றதும், காங்கிரஸ் ஆதரவை தி.மு.க.,
நாடியது.டில்லிக்கு தி.மு.க.,வினர்
படையெடுத்தனர். டில்லி மேலிட
தலைவர்களிடம், "இலங்கை தமிழர்கள்
பிரச்னையில், மத்திய அரசுக்கு, எந்த
அழுத்தமும் தரமாட்டோம்;
உணவு பாதுகாப்பு சட்ட மசோதா உள்ளிட்ட
முக்கிய மசோதாக்கள் நிறைவேற
உறுதுணையாக இருப்போம்.
லோக்சபா தேர்தலில்,
தே.மு.தி.க.,வுக்கு இணையாக
தொகுதிகளை ஒதுக்கீடு செய்வோம்;
மெகா கூட்டணி அமைந்தால், குறைந்தபட்சம்
காங்கிரசுக்கு, 10க்கும் மேற்பட்ட
தொகுதிகளை ஒதுக்குவோம்' உள்ளிட்ட
வாக்குறுதிகளை தி.மு.க.,
அளித்துள்ளது.இலங்கை தமிழர்கள்
வாழ்வுரிமையில், மத்திய அரசு,
அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்
சாட்டை மையப்படுத்தி, ஐ.மு.,
கூட்டணியிலிருந்தும், மத்திய
அமைச்சரவையிலிருந்தும் தி.மு.க.,
வெளியேறியது. ஆனால், ராஜ்யசபா தேர்தலில்,
கனிமொழி, மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,
பதவியை அடைவதற்காக, மீண்டும்,
காங்கிரசுடன் - தி.மு.க.,
கூட்டணியை புதுப்பித்துக் கொண்டது,
இலங்கை தமிழர்கள் மத்தியில்
அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள்
கூறியதாவது:அமெரிக்கா கொண்டு வந்த
தீர்மானத்தில்,
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக,
இந்தியா அழுத்தம் தரவேண்டும் என்ற
கோரிக்கையை மத்திய அரசிடம் தி.மு.க.,
வலியுறுத்தியது. இதை தொடர்ந்து, தமிழகம்
முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
நடத்தினர். அந்த போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை போல், பெரிய
அளவில் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
என, அரசியல் கட்சிகள்
கருதின.இலங்கை தமிழர்கள், தமிழக
மீனவர்களின் நலனில் அக்கறை காட்டாத
காங்கிரஸ் கூட்டணியில் இனி நீடிக்க
மாட்டோம் எனக் கூறி, தி.மு.க.,
வெளியேறியது. காங்கிரஸ்
கூட்டணியிலிருந்து, தி.மு.க.,
வெளியேறியதும், அறிவாலயத்தில்
தி.மு.க.,வினர், சோனியா, ராகுல் உருவ
பொம்மைகளை எரித்தனர்.
பதிலுக்கு சத்தியமூர்த்தி பவனில்,
கருணாநிதி, ஸ்டாலின் உருவ
பொம்மைகளை காங்கிரசார் எரித்தனர். இந்த
உருவ பொம்மைகளின் சாம்பல் உலர்வதற்குள்,
மீண்டும், தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளின்
கூட்டணி புதுப்பிக்கப்பட்டுள்ளது.அதேசமயம்,
ஒரு எம்.பி., சீட்டுக்காக, காங்கிரசிடம்
ஆதரவு கேட்காமல் இருந்திருந்தால், தி.மு.க.,
கொள்கைக்காக, பாடுபடும் கட்சி என்ற
பெயரை தக்க வைத்திருக்கும்.
தற்போது, ஒரு எம்.பி., சீட்டுக்காக, மீண்டும்
காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி அமைத்தது,
இலங்கை தமிழர்கள் மத்தியில் கடும்
அதிருப்தியை உருவாக்கியுள்ளது.இலங்கை தமி
ழர்கள் பிரச்னை, லோக்சபா தேர்தலில்
எடுபடாது, என, தி.மு.க., கருதுகிறது. 2009ம்
ஆண்டில், லோக்சபா தேர்தல்,
இலங்கை பிரச்னையை மையப்படுத்தி நடந்தது.
அதில், அ.தி.மு.க., கூட்டணியை விட, அதிக
தொகுதிகளை தி.மு.க., - காங்கிரஸ்
கூட்டணி வெற்றி பெற்றது. எனவே,
லோக்சபா தேர்தலில், இலங்கை தமிழர்கள்
பிரச்னை, தமிழக தேர்தலில் எந்த பாதிப்பும்
ஏற்படுத்தாது என்ற அடிப்படையில் தான்,
ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், கனிமொழியின்
வெற்றிக்காக, மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க.,
கைகோர்த்துள்ளது. இது சந்தர்ப்பவாத
கூட்டணி.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger