Saturday, 15 June 2013

தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் மரணம்

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில்

இவர் 1979-ம் ஆண்டு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆனார். இவரது முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. நூறாவது நாள், ஜல்லிக்கட்டு உள்ளபட 50 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அமைதிப்படை மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ்திரையுலகின் முக்கிய இயக்குனர் என்ற அந்தஸ்து இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

படையப்பா, முதல்வன், காதலுக்கு மரியாதை, ரெட் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் வெளியான ராஜராஜ சோழன் எம்.ஏ. என்ற படம் இவரது 50-வது படம். இதுவே கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டது.

நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 59.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger