Friday 28 June 2013

உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை பெற்றோரை காணாமல் பரிதவிக்கும் சோகம்

 நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைதளங்கள் அல்லது பேஸ்புக்  தளங்களில் பகிரவும் 

உத்தரகாண்ட் மாநிலத்தை உலுக்கிய இயற்கை பேரழிவின் தாக்கம் மெதுவாக குறைந்து வரும் நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகக் கதைகளும், இழப்புகள் பற்றிய தகவல்களும் தொடர்ந்து வெளியாகி கண்கலங்க வைக்கின்றன.

இந்த பேரழிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. சில குடும்பங்கள் தங்கள் அன்புக்குரிய ஒருவரை இழந்திருக்கின்றனர். காணாமல் போனவர்களின் வருகைக்காக அவர்களின் குடும்பத்தினர் தாங்கமுடியாத துயரத்துடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் டேராடூன் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கும் 3 வயது பெண் குழந்தை, தனது பெற்றோரைக் காணாமல் தவிக்கிறது. பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது அந்த குழந்தையின் பெற்றோர் காணாமல் போனார்கள்.

இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, உடல் முழுவதும் காயங்களுடன் ரிஷிகேஷ் பகுதியில் மீட்கப்பட்ட அந்த குழந்தை, 24-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தையின் பெயர் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி யாருக்கும் தெரியவில்லை. தற்போது உடல்நலம் ஓரளவு தேறி வந்தபோதிலும், தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும் அந்த குழந்தைக்கு ஊழியர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger