Monday, 17 June 2013

கள்ளக்காதல் விவகாரம் ரயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை வேப்பம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் தனபால், தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சரஸ்வதிக்கும் அந்த பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முத்துகுமார்(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

இதையறிந்த தனபால் மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் முத்துக்குமாருடனான பழக்கத்தை கைவிடவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரஸ்வதி கைக்குழந்தையுடன் கள்ளக்காதலன் முத்து குமாரோடு ஊரைவிட்டு ஓடினார்.

தனபால் பல இடங்களில் அவர்களை தேடினார். எனினும் அவர்கள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்று காலை நாங்குநேரி வாகைக்குளம் ரெயில்வே கேட் அருகே குழந்தையுடன் 2 பேர் இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு இறந்து கிடந்தது வேப்பம்பாடை சேர்ந்த முத்துகுமார், சரஸ்வதி அவரது குழந்தை என்பது தெரியவந்தது. 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் குழந்தையுடன் முத்துகுமாரும், சரஸ்வதியும் இன்று காலை நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger