Monday, 27 May 2013

பேஸ்புக் நட்பால் விபரீதம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் சிறுவன் முஸ்தபா (13). 24 மணி நேரமும் இணையதளத்தில் மூழ்கியிருந்த முஸ்தபா, பேஸ் புக் மூலம் முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவனுக்கு பேஸ் புக்கில் அறிமுகமான சிலர் முஸ்தபாவை சந்திக்க விரும்புவதாக கூறினர்.

கடந்த வெள்ளிக்கிழமை புதிய தோழமையை எதிர்பார்த்து சென்ற முஸ்தபாவை அவர்கள் கடத்திச் சென்று பலூசிஸ்தான் மாகாணத்தில் ஓர் ரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர்.

முஸ்தபாவின் தந்தை கராச்சி சுங்கத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், முஸ்தபாவை விடுவிக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.5 கோடி தர வேண்டும். தவறினால் அவனை கொன்று விடுவோம் என கூறி மிரட்டினர்.

இச்சம்பவம் பற்றி கராச்சி போலீசாரிடம் அவர் புகார் அளித்தார்.

அவருக்கு தொடர்ந்து வந்த செல்போன் அழைப்புகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் செல்போன் சிக்னலின்படி, கடத்தல்காரர்களின் ரகசிய இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.

இன்று அதிகாலை அந்த வீட்டை முற்றுகையிட்டு கடத்தல்காரர்கள் 4 பேரை சுட்டுக்கொன்று சிறுவன் முஸ்தபாவை போலீசார் மீட்டனர்.

மீட்கப்பட்ட மகனின் அருகில் அமர்ந்தபடி பெண்களுக்கு கோரிக்கை விடுத்த முஸ்தபாவின் தாயார், பேஸ் புக் போன்ற இணைய தளங்களில் தங்கள் பிள்ளைகள் இணையாதபடி அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

இல்லையென்றால், என் மகனுக்கு ஏற்பட்டது போன்ற சூழ்நிலையோ அல்லது அதைவிட மோசமான கதியோ உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம் என்று கூறினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger