ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). தொழிலாளி. கடந்த 5-ந்தேதி இரவு வீட்டு முன்பு திண்ணையில் தூங்கியபோது கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். ராமுவின் இறுதிச் சடங்கு நடந்த போது அவரது மனைவி ரதியின் நடவடிக்கையில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் ராஜசேகரனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.
ரதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
கணவர் ராமுவுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது அருந்தி வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டு இரவில் தூங்கி விடுவார். இதனால் செக்ஸ் ஆசை நிறைவேறாமல் தவித்து வந்தேன். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகரன், என்னிடம் அன்பாக பேசி பழகினார். இதனால் கணவரை வெறுத்தேன்.
நாங்கள் 2 பேரும் வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருப்போம். கணவர் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டிலும் ஜாலியாக இந்தோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் படுக்கையில் ஒன்றாக இருந்ததை கணவர் ராமு பார்த்துவிட்டார். எங்கள் இருவரையும் கண்டித்து எச்சரித்தார். இதனால் ஒன்று சேர முடியாமல் தவித்தோம்.
கணவரை தீர்த்து கட்டி விட்டால் ஒன்றாக வாழலாம் என்று நினைத்தோம். ராஜசேகரனும் எனது 3 குழந்தைகளையும் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து தினமும் வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கும் ராமுவை மின்தடை ஏற்படும் நேரத்தில் கொலை செய்ய திட்டமிட்டோம்.
சம்பவத்தன்று இரவு திட்டப்படி கத்தியுடன் வந்த ராஜசேகரன் கணவர் ராமுவை கொலை செய்ய முயன்றபோது 2 பேருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. கணவர் வீட்டு கதவை தட்டி என்னை உதவிக்கு அழைத்தார். நான் கதவை திறக்காமல் வீட்டின் ஜன்னல் வழியே சண்டையை பார்த்தேன்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது கணவர் ராமுவின் கழுத்தை அறுத்து விட்டு ராஜசேகரன் தப்பி ஓடி விட்டார். இதில் அவர் இறந்து விட்டார். மர்ம நபர்கள் கணவரின் கழுத்தை அறுத்து கொன்று விட்டதாக நாடகமாடி அழுதேன். ஆனால் என்னை விசாரித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொலை நடந்த நாளில் இருந்து ராஜசேகரன் தலைமறைவாக இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் ராஜசேகரனும், கொலையுண்ட ராமுவின் மனைவி ரதியும் அடிக்கடி சந்தித்து பேசுவதும் தெரிய வந்தது. கணவனின் இறுதிச் சடங்கிலும் ரதியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
ராஜசேகரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ரதிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தந்தையை இழந்து, தாயும் சிறையில் உள்ளதால் அவர்களது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?