Friday 22 March 2013

நான் தான் அடுத்த பிரதமர் - ராகுல் காந்தி

பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஏற்கனவே தயாராகி விட்டது. இதற்காக ராகுல்காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசை வழிநடத்திச் செல்ல திட்ட மிடப்பட்டுள்ளது.தேர்தலில் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங்குக்கு மீண்டும் பிரதமர் பதவி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர். எனவே அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ராகுல்காந்திக்கு இருப்பதாக காங்கிரசார் கூறி வருகிறார்கள்.இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும், திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கூறியதாக செய்தி பரவியது.இந்த தகவலை உடனடியாக மறுத்த ராகுல்காந்தி தற்போது தான் அப்படி கூறவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த ராகுல்காந்தி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாராளுமன்ற தேர்தல் பற்றியும், பிரதமர் பதவி பற்றியும் பேச்சு எழுந்தது.பிரதமர் பதவி மீது ஆசையில்லை என்று கூறியது பற்றி ராகுல்காந்தியிடம் கேட்டபோது, தான் அந்த கருத்தில் சொல்லவில்லை. நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் என்று சொன்னதாக காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.காங்கிரசின் பிரதமர் வேட்பாளர்ராகுல்காந்தி தான். அவர் தலைமையில் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் என்றும் காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. எனவே காங்கிரசும், பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger