காற்றினிலே வரும் கீதம், பிஸ்தா, சும்மா இருங்க மச்சான், கும்பகோணம் கோபால் உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்தவர், கவிதா. இவர், இப்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர், அந்த கட்சியின் மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.
கவிதாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் பெயர், மாதுரி (வயது 21) எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவரும், ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டம் சங்கரப்பட்டணத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமாரும், ஐதராபாத் பெத்தபள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
மகள் திருமணம் பற்றி நடிகை கவிதா, சில பரபரப்பான தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது:-
என் மகளுக்கும், கார் டிரைவர் ராஜ்குமாருக்கும் திருமணம் நடக்கவில்லை. கடைசி நிமிடத்தில் அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ராஜ்குமார் என்னுடைய கார் டிரைவர் கிடையாது. செகந்திராபாத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் நாங்கள் மூன்றாவது மாடியில் வசிக்கிறோம். ராஜ்குமார், முதல் மாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் கார் டிரைவராக இருந்தான். அந்த வகையில்தான் எங்களுக்கு அவன் அறிமுகம் ஆனான். கார் பார்க்கிங்கில் பார்க்கும்போது, ஹலோ சொல்வதுடன் சரி. மற்றபடி, அவனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவனுடன் என் மகளுக்கு காதலும் இல்லை.
சம்பவத்தன்று என் மகள் மாதுரி, பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றிருந்தாள். அப்போது அவளுக்கு ராஜ்குமார் குளிர்பானம் வாங்கி கொடுத்து இருக்கிறான். அதில் மயக்க மருந்து கலந்திருந்தது தெரியாமல் மாதுரி குடித்து விட்டாள். மயங்கி சரிந்த அவளை, ராஜ்குமார் ஒரு ஆட்டோவில் கடத்தி சென்று இருக்கிறான். கோவிலில் என் மகள் கழுத்தில் அவன் மாலை அணிவித்தபோது, போலீசார் அவனை மடக்கிப் பிடித்து விட்டார்கள். கடைசி நிமிடத்தில் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.
இதுதொடர்பாக என் கணவர் தசரதராஜ் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். ராஜ்குமாரை போலீசார் கைது செய்து காவலில் வைத்து இருக்கிறார்கள். அவனிடம் இருந்து போலீசார் என் மகளை மீட்டு, எங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள்.
என் மகளை கடத்தி சென்ற கார் டிரைவர் ராஜ்குமார், ஏற்கனவே 3 திருமணங்கள் செய்தவன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவன் பெண்களை கடத்தி விற்பவன் என்பது தெரியவந்து இருக்கிறது. அவனிடம் இருந்து குஜராத் செல்வதற்கான ரெயில் டிக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?