Wednesday, 13 March 2013

இலஞ்சியை சேர்ந்த இளம் பெண் கற்பழிப்பு

மதுரை ரெயில் நிலையத்தில் தாய்க்கு காபியில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து இளம் பெண்ணை கற்பழித்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் ரேவதி (வயது30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக தாயுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அங்கு சிகிச்சை பெற்றபிறகு நேற்று இரவு ஊருக்கு செல்வதற்காக மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அங்கு அவர்கள் அமர்ந்து இருந்தபோது ஒரு வாலிபர் ரேவதி தாயாருடன் பேசி உள்ளார். அப்போது அவர் வாங்கி கொடுத்த காபியை தாய் குடித்ததும் மயங்கி விட்டார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு கண் விழித்த அவர் மகளுடன் ரெயில் ஏறி தென்காசி புறப்பட்டார். திருமங்கலம் அருகே ரெயில் சென்றபோது ரேவதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அப்போது மகளிடம் விசாரித்தபோதுதான் அவளை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்த வாலிபர் அதன் பிறகு ரேவதியை தனியாக அழைத்து சென்று கற்பழித்து விட்டதாக தாய் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger