உத்தரபிரதேசத்தில் ஓடும் ரெயிலில் இருந்து போலீசாரால் தள்ளி விடப்பட்ட தம்பதி: ரெயில் சக்கரத்தில் சிக்கி மனைவி பலி
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்தவர் ராஜேஷ்வர் தியாகி. நீர்ப்பாசனத் துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் இவர் நேற்று காலை சந்த்பூர் நகருக்கு செல்வதற்காக தனது மனைவி சந்தோசுடன் முசாபர்நகர் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.
சந்த்பூருக்கு செல்ல டிக்கெட் எடுத்து விட்டு காத்திருந்தபோது டெல்லி- டேராடூன் இடையே ஓடும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்தில் கடும் கூட்டமாக இருந்ததால் உடனடியாக அவர்களால் ஏற முடியவில்லை. என்றாலும் கடைசி பெட்டியில் அவர்கள் ஏறினார்கள்.
வாசலில் தொங்கியபடி நின்ற அவர்களை ரெயில்வே போலீசார் உள்ளே ஏற அனுமதிக்கவில்லை. நீங்கள் எடுத்துள்ள டிக்கெட்டுக்கு இந்த பெட்டியில் பயணம் செய்யமுடியாது என்றனர்.
இதையடுத்து போலீசாருக்கும், தியாகிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ரெயில் புறப்பட்டு நகரத் தொடங்கியது. அப்போது போலீசார் ராஜேஸ்வர் தியாகியையும் அவரது மனைவி சந்தோசையும் கீழே பிடித்து தள்ளி னார்கள். ராஜேஸ்வர் தியாகி பிளாட்பாரத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் மனைவி சந்தோஷ் பிளாட்பாரத்துக்கும், ரெயிலுக்கும் இடையில் விழுந்தார். இதனால் அவர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதை கண்டதும் அவர்களை தள்ளி விட்ட ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்சந்தர், போலீஸ்காரர் சுபாஷ் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். காயம் அடைந்த தியாகி இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து உத்தரபிரதேச மாநில போலீஸ் உயர் அதிகாரி ஓ.பி.சிங் நேரில் விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், ரெயில் பெட்டியில் இருந்து தவறி விழுந்துகூட அந்த பெண் இறந்திருக்கலாம். இதுதொடர்பாக நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?